மேகதாது.. காவிரி நீர்.. டி.கே. சிவகுமாரை கண்டிக்காத ஸ்டாலின்.. கோ பேக் சொல்வோம்.. அண்ணாமலை கறார்
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியையோ, டி.கே. சிவகுமாரையோ கண்டிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கர்நாடகா காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பாஜக எந்த அரசியலையும் செய்யவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
நாகர்கோவில் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இந்த ஆண்டு காவிரி நீர் தமிழகத்திற்கு கிடையாது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்க்கட்சி கூட்டத்திற்கு கர்நாடகாவிற்கு வரும் 11ஆம் தேதி செல்வார் என பார்ப்போம் என்று கூறினார்.

கர்நாடகாவிற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றால் அவர் மீண்டும் தமிழகத்திற்குள் வரமாட்டார். வருவதற்கும் நாங்கள் விடமாட்டோம். தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கூறிய பிறகும், அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு தமிழ் இனத்தை அடமானம் வைத்து விட்டு, அரசியல் லாபத்திற்காக முதலமைச்சர் சென்றால் பா.ஜ.க. அதனை பார்த்துக்கொண்டு இருக்காது. கோட்டையை முற்றுகையிடுவது மட்டுமில்லை. நீங்கள் எப்படி கோட்டைக்குள் செல்கிறீர்கள் என பார்ப்போம். தமிழக முதலமைச்சர் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மேகதாது ஆணை காட்டுவதாக காங்கிரஸ் கட்சி தான் தேர்தல் அறிக்கை கொடுத்தது. மேகதாது அணை மூலம் சிவகுமாரின் தொகுதி தான் அதிகம் பயன்பெறும்.
மேகதாது விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் கர்நாடகவிற்கு முதல்வர் சென்றால் 'கோ பேக்' ஸ்டாலின் என போராட்டம் நடத்துவோம். கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியை கண்டிக்க தமிழக முதல்வருக்கு மனதில்லை. மேலும், காவிரி நதி நீர் பங்கிட்டு விவகாரத்தில் பாஜக என்ற அரசியலும் நடத்தவில்லை. முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்தில் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications