Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் அறிக்கையை கவனித்தீர்களா.. அப்போ பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிபோகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அப்போது அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் பொன்முடி இழந்தார். ஆனால் அதன்பின்னர் மேல்முறையீடு காரணமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், மீண்டும் அமைச்சராக பொன்முடி பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி மறுத்தவிட்டார். அப்போது பொன்முடிக்காக சண்டை போட்டு, ஸ்டாலின், அவரை அமைச்சராக்கினார். ஆனால் அவரே இன்று கட்சி பதவியை பறித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு உள்ளது. வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த 2013ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் குற்றவாளி என அறிவித்தது.

MK Stalin who fought with the governor that day will Ponmudi lose his ministerial position today

அத்துடன் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம் இந்தத் தண்டனை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

பொன்முடி மேல்முறையீடு

தொடர்ந்து பொன்முடி உயர்கல்வித்துறைஅமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து தண்டனையை மேல்முறையீட்டு வழக்கின் முடிவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடியும் அவரது மனைவியும் வழக்கு தொடர்ந்தார்கள்.

நீதிமன்றம் அனுமதி

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் , பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சிக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில், பொன்முடிக்கு தீர்ப்பையும், அவரின் மனைவிக்கு தண்டனையையும் நிறுத்திவைத்தனர். மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராவதற்கான சட்ட ரீதியான தடை நீங்கியது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதையடுத்து திருக்கோவிலூர் எம்எல்ஏவான பொன்முடியை அமைச்சராக்க பரிந்துரை செய்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கமறுத்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி திமுக தலைவர் கே. பொன்முடியை உயர்கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் ஆர்.என்.ரவி பின்பற்ற மறுப்பதன் மூலம், மாநிலத்தில் "இணை அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார்" என்று குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது .

உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

இந்த வழக்கில் ஆளுநர் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்றம், பதவி பிரமாணம் செய்து வைக்க தடையில்லை என்று கூறியது. இப்படி சண்டை போட்டு தான் தமிழக முதல்வர் ஸ்டாலின், பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கினார். அவருக்கு உயர்கல்விக்கு பதில் வனத்துறை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை அமைச்சராக பொன்முடி தொடர்ந்தார்.


விழுப்புரம் திமுகவின் முகம் பொன்முடி

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் முக்கியமான சக்தி வாய்ந்த திமுக தலைவராக பொன்முடி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். ஆனால் அவரது சர்ச்சை பேச்சுக்களே அவருக்கு சிக்கலாக மாறி உள்ளது. முதல்முறை ஓசி டிக்கெட் என்று மகளிர் பேருந்து பயணத்தை விமர்சித்தபோது கடும் விமர்சனத்திற்கு உள்ளான பொன்முடி, இப்போது இரண்டாவது முறையாக பெண்கள் விஷயத்தில் மோசமாக பேசியதற்காக சிக்கி உள்ளார். இந்த முறை ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தலைமைக் கழக அறிவிப்பு என்ற பெயரில் இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி அவர்கள், அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்" என்று கூறியுள்ளார். இதில் என்ன காரணம் என்று குறிப்பிடவில்லை.. பொதுவாக கழக கட்டுப்பாட்டை மீறியதாக அல்லது ஏதாவது வார்த்தைகள் இருக்கும்..இதில் எதுவும் இல்லை.. எனவே கட்சி பொறுப்பை தொடர்ந்து அமைச்சர் பதவியும் பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர் பதவி பறிப்பு

பொன்முடி பேசிய சர்ச்சை பேச்சுக்காக அவரது கட்சி பதவியான துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் பறித்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி அவராக விலகுவாரா என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்தும் கண்டிப்பாக நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதனால் பொன்முடி நெருக்கடியில் சிக்கியுள்ளார். யாரை கவர்னருடன் சண்டை போட்டு அமைச்சராக்கினரோ, அவரையே இன்று கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து ஸ்டாலின் நீக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+