தங்கைக்கு அண்ணன் வாழ்த்து.. அண்ணனுக்கு தங்கை நன்றி.. அத்தைக்கு உதயநிதியும் பாராட்டு!

விருது பெற போகும் கனிமொழிக்கு ஸ்டாலின், உதயநிதி வாழ்த்து கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருது பெறப்போகும் தங்கை கனிமொழிக்கு அண்ணன் ஸ்டாலினும், அத்தைக்கு உதயநிதி ஸ்டாலினும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட உள்ளது.

இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து கனிமொழிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இதையடுத்து கனிமொழிக்கு திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.

தங்கைக்கு ஸ்டாலின் பாராட்டு

ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். கழக MP-க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது! அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

கனிமொழி நன்றி

ஸ்டாலினின் இந்த வாழ்த்திற்கு கனிமொழி நன்றி தெரிவித்து பதில் ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "கழகத் தலைவர் அண்ணன் தளபதியின் @mkstalin வாழ்த்து மட்டில்லா மகிழ்ச்சி அளிக்கிறது! நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

அத்தைக்கு வாழ்த்து

இதேபோல, உதயநிதி ஸ்டாலின் தனது அத்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடுக்கப்பட்டோர் குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பதில் கணீர் மொழி! அவருக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி! வாழ்த்துகள் அத்தை!" என்று பதிவிட்டுள்ளார்.

பாசம் விட்டு போகுமா

பாசம் விட்டு போகுமா

ஏற்கனவே கனிமொழியை ஸ்டாலின் திமுகவிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளதாகவும், எந்த கூட்டத்திலும் முதன்மை படுத்துவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல், உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் தற்போது தரப்படும் முக்கியத்துவம் கனிமொழிக்கு தரப்படுவதில்லை என்றும் கட்சி தொண்டர்களிடையே சர்ச்சை எழுந்து வரும்நிலையில், ஸ்டாலினும், உதயநிதியும் தெரிவித்துள்ள இந்த வாழ்த்து பதிவுகள் கட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+