Stalin: நினைச்சி கூட பார்த்திருக்கமாட்டாரே! சென்னை டிராபிக்கில் சிக்கிய ஸ்டாலின்! ஆமை போல் நகர்ந்த கார்!
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அவரது வாகனம் டிராபிக்கில் சிக்கி சென்ற வீடியோவை பார்த்து திமுகவினர் கண்ணீர் வடிக்கிறார்கள்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து அவருக்கு நாட்டின் மிக உயரிய இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அதன்படி துப்பாக்கி ஏந்திய வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பர். அதிநவீன பாதுகாப்பு வாகனங்களும் அவரது தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துவிட்டது. கொளத்தூரில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்தார். ஆட்சியை இழந்தாலும் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது.
இதற்காக தினமும் சுமார் 50 கமாண்டோக்கள், சிறப்பு பிரிவு போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இயல்பாகவே ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் பதவியை இழக்கும் போது, அந்த முன்னாள் முதல்வருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதை மறுஆய்வு செய்து பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்கமான நடைமுறைதான்.
அந்த வகையில் தமிழகத்தில் வசிக்கும் விஐபிக்களின் பாதுகாப்பு நடைமுறைகளை மத்திய, மாநில உளவுப் பிரிவு ஆய்வு மேற்கொண்டது. அதன்படி ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு, இசட் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 22 காவலர்கள் பணியில் இருப்பார்கள்.
இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாற்றப்பட்டன. முன்பெல்லாம் அவரது வீட்டிற்கு செல்லும் நுழைவு வாயில்களில் போலீஸார் சுழற்சி முறையில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகளுக்கு பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது பாதுகாப்பு குறைவால் 2 நுழைவாயிலில் மட்டுமே போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஸ்டாலின் எந்த போக்குவரத்து நெரிசலிலும் சிக்காமல் சர்ரென சென்று வந்தார். அதுதான் அவரது பதவிக்கான புரோட்டோகால்! ஆனால் தற்போது மு.க.ஸ்டாலினின் கார் போக்குவரத்தில் சிக்கி அவரது வாகனம் தத்தளிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதை பார்க்கும் திமுகவினர் கண்ணீர் வடிக்கிறார்கள். இது போன்றதொரு நிலை வரும் எந ஸ்டாலின் ஒரு போதும் நினைத்திருக்கமாட்டார்!


Click it and Unblock the Notifications
