காங்கிரஸுக்கு கல்தா.. மு.க.ஸ்டாலின் தலைமையில் 3வது அணி! ஓரம் கட்டப்படும் ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்குவதில் மாநில கட்சிகளுக்கு எப்போதுமே யோசனை இருந்து வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், சிறந்த முதல்வர்கள் யார் என்கிற கேள்விக்கு மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் என கரப்பான் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே பேசியிருப்பது.. தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத 3வது அணிக்கான சாத்தியங்கள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியிருக்கின்றன.

சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி ஜென் ஸீ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தீப்கேவிடம், சிறந்த முதல்வர்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் என்று தீப்கே பதிலளித்திருந்தார்.

MK Stalin DMK congress

காங்கிரஸ் மீதான அதிருப்தி

இந்த பதில், ஏற்கெனவே மூன்றாவது அணி பற்றி யோசித்து வரும் மாநில கட்சிகளுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. ஏனெனில் காங்கிரஸ் மீது கம்யூனிஸ்ட்டுகளும், திமுகவும், ஆம் ஆத்மியும் கடும் அதிருப்தியில் இருக்கிறது.

கேரள நிலவரம்

கேரளத்தை எடுத்துக்கொண்டால், கம்யூனிஸ்ட்டுகளும்.. காங்கிரஸும்தான் மாறி மாறி ஆட்சி அதிகாரத்திற்கு வரும். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கம்யூனிஸ்ட்டுகளை பாஜகவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் செய்து வரும் அரசியல்.. சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டும் நேர் எதிர் சித்தாந்தம்.. காங்கிரஸ் கட்சி கூட ஒரு நாள் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம்.. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருநாளும் அப்படி செய்யாது என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் கூட.. பாஜகவுடன் கம்யூனிஸ்ட் கட்சியை ஒப்பிட்டு பேசுவது எப்படி சரியாக இருக்கும் என்று அக்கட்சி, காங்கிரஸுக்கு எதிராக கொந்தளித்திருக்கிறது.

திமுக vs காங்கிரஸ்

அதேபோல தமிழ்நாட்டிலும், காங்கிரஸ் தன்கான நன்மதிப்பை கெடுத்துக்கொண்டது. திமுக கூட்டணியில் இருந்து, தேர்தல் வெற்றிக்கு பிறகு தவெகவுக்கு தாவியது. இது இயல்புதான். எங்கு வெற்றி இருக்கிறதோ.. அந்த பக்கம் கூட்டணி கட்சிகள் தாவும். ஆனால், பழைய கூட்டணி குறித்து கொஞ்சம் கூட யோசிக்காமல் தாவியது காங்கிரஸ் மட்டும்தான்.

நன்மதிப்பை குறைத்துக்கொண்ட காங்கிரஸ்

திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள்.. முறைபடி திமுக தலைவரை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து பின்னர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் காங்கிரஸ், ஒரு வார்த்தை கூட பேசாமல்.. மரியாதைக்கு கூட திமுகவினரை சந்திக்காமல்.. தவெக பக்கம் சென்றுவிட்டது. இது காங்கிரஸ் மீதான மதிப்பை குறைத்திருக்கிறது.

வட மாநிலங்களில் நிலைமை

தென் மாநிலங்களில்தான் இப்படி எனில்.. வட மாநிலங்களும் காங்கிரஸுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல பெயர் இல்லை. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது.. அந்த ஆட்சிக்கு எதிராக பாஜக வேலை பார்த்ததை விட.. காங்கிரஸ்தான் இறங்கி வேலை பார்த்துதான் அதிகம். டெல்லி ஆம் ஆத்மி அரசு காலியாக முக்கிய காரணமாக இருந்தது மதுபான கொள்கை ஊழல் புகார்தான். இந்த புகாரை கொடுத்ததே காங்கிரஸ்தான். இப்படி ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக செயல்பட்டு அக்கட்சியை காங்கிரஸ் காலி செய்துவிட்டது.

இந்தியா கூட்டணி

ஆனாலும், டெல்லியில் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தற்போது பாஜகதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. காங்கிரஸ் vs ஆம் ஆத்மி என்று இருக்க வேண்டிய கேமை.. காங்கிரஸ் vs பாஜக என்று மாற்றியது ராகுல் காந்திதான்.

இப்படியாக இந்த மூன்று கட்சிகளுக்கும் காங்கிரஸ் மீது தீரா பகை இருக்கிறது. இருந்தாலும், தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க இந்தியா கூட்டணயில் பல்லை கடித்துக்கொண்டு இருக்கின்றன. ஆனால், ரொம்ப நாட்களுக்கு இது நீடிக்காது.. விரைவில் மூன்றாம் அணி உருவாகும் என்று பேசப்படுகிறது. இதற்கான அச்சாரத்தை தற்போது அபிஜித் தீப்கே போட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+