Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் கனவு திட்டம்.. "சிங்கார சென்னை 2.0".. வெளியானது முக்கிய அம்சங்கள்.. நிதியமைச்சர் அதிரடி

ரேசன் கடைகளில் பருப்பு, எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும் என்று பிடிஆர் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படுமென தமிழக பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்... அத்துடன், சென்னையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கும் முக்கியத்துவம் அளித்து சிங்காரச் சென்னை 2.0 தொடங்கப்படும் என்றும் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Petrol விலை குறைப்பு முதல் பெண்களுக்கு பண உதவி வரை TNBudget-டின் டாப் 10 அறிவிப்புகள் விரிவான அலசல்!

    2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் தொடங்கி உள்ளது..

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது...

    பட்ஜெட்

    பட்ஜெட்

    சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல துறைகளின் முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.. அதில் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்று பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார்.

     கழிவுநீர்

    கழிவுநீர்

    இதிலுள்ள முக்கிய அம்சங்கள் இதுதான்: சீர்மிகு நகர திட்டத்திற்கு 2, 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 2,056 ஆயிரம் கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டம் ஏற்படுத்தப்படும்.. சென்னையில் உள்ள நீர் வழிகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் 2,371 கோடி செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

    அறிக்கை

    அறிக்கை

    ஆந்திர பிரதேச கிருஷ்ணா நீர் தேக்கத்திலிருந்து சென்னை நீர் நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்படும்... சென்னை நகர கூட்டாண்மை திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்படும். கணேசபுரம் சுரங்கப் பாதை, கொன்னூர் நெஞ்சாலை, தெற்கு உஸ்மான் பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

    கடல்நீர்

    கடல்நீர்

    ஒவ்வொரு வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உத்தியின் மூலமாக 400 மிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.. சென்னையில் புதிதாக 3 இடங்களில் மேம்பாலங்கள் ரூ.335 கேடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொலிவு

    பொலிவு

    சென்னையை மீண்டும் சிங்கார சென்னையாக்குவோம் என்று ஏற்கனவே திமுக அறிவித்திருந்தது.. அதன்படியே, சிங்கார சென்னை 2.0 திட்ட பணிகளும் ஆரம்பமாயின.. சென்னையின் பழைய பொலிவை மீட்டு கொண்டு வரும் வகையில் இந்த திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. இது சென்னைக்கு கிடைக்க போகும் முக்கியமான வரப்பிரசாதம் ஆகும்.

    வாக்களிப்பு

    வாக்களிப்பு

    உலகிலுள்ள பழம்பெரும் மாநகராட்சிகளில் ஒன்றுதான் சென்னை மாநகராட்சி.. கடந்த 20 ஆண்டுகளில், மேயர் என்றாலே டக்கென நம் கண்முன் வந்து நிற்பது ஸ்டாலின் பெயர்தான்.. இதற்கு காரணம், மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றவர் முக ஸ்டாலின்தான்... ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னைக்கு செய்த சீர்திருத்தங்கள் ஏராளம்..

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    அன்று மேயர் ஸ்டாலின் மட்டும் இல்லையென்றால், இன்று சென்னையில் இத்தனை பாலங்கள், மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல், சாலைப் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், கடற்கரை சீரமைப்பு இப்படி பல்வேறு பணிகள் நடந்திருக்காது.. கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில், சென்னையை விரிவுபடுத்தும் எந்த திட்டமும் கையில் எடுக்கப்படவில்லை...

     கனவு திட்டம்

    கனவு திட்டம்

    இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் சென்னைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தை அமல்படுத்த உள்ளது.. இது முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமும் ஆகும்.. அந்தவகையில்தான் இன்றைய பட்ஜெட்டில் சென்னைக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+