சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அதிரடி முடிவு".. மொத்தமா கிளம்பி போய்... இதென்ன புதுஸ்ஸா இருக்கு.. ஒர்க் அவுட் ஆகுமா?

திமுகவில் கூட்டணி கட்சிகளிடம் இழுபறி நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் இதுவரை எந்த உறுதியும் எட்டப்படாததால், நித்தம் ஒரு தகவல்கள் கசிந்தபடியே உள்ளன.. அந்த வகையில் இப்போதும் ஒரு சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

இதுவரை திமுகவும்சரி, அதிமுகவும் சரி, இப்படி ஒரு இழுவையில் தேர்தல் ஆலோசனையில் ஈடுபட்டதில்லை.. மெகா கட்சிகளாக இருந்தாலும் கூட, கூட்டணி இல்லாமல் இந்த கட்சிகள் போட்டியிட்டதில்லை..

ஆனால், இந்த முறை கூட்டணிகளிடம் எப்போதும் இல்லாத கறார் தன்மையை இரு கட்சிகளும் காட்டி வருகின்றன. இதற்கு காரணம், ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியை பிடிக்க திமுகவும் முடிவெடுத்துள்ளன.

செம டிவிஸ்ட்டா இருக்கே இது.. சசிகலாவுக்கும் ஒரு முதல்வர் வேட்பாளர்.. அது "இவரா"!!

 தலைமை

தலைமை

அதிமுகவிலாவது சீட் இழுபறி, தொகுதி பிரச்சனை மட்டும் நடக்கிறது.. ஆனால், திமுக கூட்டணியில் சின்னம் பிரச்சனை கூடுதலாக உள்ளது.. மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிடம் தங்களுக்கு தேவையான சீட்களை கேட்டு நெருக்கி வருகின்றனர்.. ஆனால், 20 முதல் 30சீட்கள் வரை ஒவ்வொரு கட்சிகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

கோரிக்கை

கோரிக்கை

ஆனால், ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே சீட்களை ஒதுக்க திமுக யோசித்து வருகிறது. இதற்காகத்தான் இன்னொரு முடிவை, இக்கட்சிகள் எடுத்துள்ளனவாம்.. இப்படி திமுகவிடம் தனித்தனியாக சென்று கோரிக்கை வைத்து, சீட் பேரம் நடத்துவதைவிட, மொத்தமாகவே கிளம்பி சென்று, பேச்சுவார்த்தையை நடத்துவது என்றும், கடந்த எம்பி தேர்தலில் எப்படி எல்லாருக்கும் சமமான சீட்கள் தரப்பட்டதோ, இந்த முறையும் அப்படி சீட் தர வேண்டும் என்று வலியுறுத்தலாம் என்றும் யோசித்து வருகிறார்களாம்..

 தொகுதிகள்

தொகுதிகள்

எல்லாரும் சேர்ந்து ஒரேமாதிரியான சீட் எண்ணிக்கையை கேட்டால் குறைந்தபட்சம் 10 சீட்டுக்களையாவது பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகின்றனவாம்.. அதுமட்டுமல்ல, 5 சீட், 7 சீட், 6, சீட்கள் என திமுக ஒரு கணக்கு போட்டிருந்தாலும், கூட்டணி கட்சிகள் சேர்ந்து அழுத்தம் தரும்போது நிச்சயம் மனமாற்றம் ஏற்படும் என்றும் நம்புகிறதாம்.

சீட்

சீட்

இப்படி ஒரு ஐடியா எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. கூட்டணிகளுக்கு பெருவாரியாக சீட்டுகளை ஒதுக்கிவிட்டால், அதிமுகவை சமாளிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் திமுக உள்ளபோது, அவர்கள் கேட்கும் சீட்டுகளை ஒதுக்க திமுக சம்மதிக்குமா என்று தெரியவில்லை.. அதேசமயம், கூட்டணிகளை விட்டுத்தந்துவிடக்கூடாது என்று ஸ்டாலினும் உறுதியாக உள்ள நிலையில், எல்லாமே சுபம் ஆக முடியும் என்ற நம்பிக்கையும் பரவி வருகிறது.

English summary
MK Stalins Plan and When will the DMK alliance be decided
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X