திமுக ஆட்சியை "அவர்" கலைச்சிடுவாரா?.. கிரிமினல்களின் வாலை ஒட்ட நறுக்குவார் ஸ்டாலின்.. முத்தரசன் நச்
பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்
சென்னை: "எந்த சாமியாருக்கும் இந்த அரசு பணியாது.. யார் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் உரிய விசாரணையை முதல்வர் எடுப்பார்.. பாலியல் குற்றவாளிகளின் வாலை ஸ்டாலின் ஒட்ட நறுக்குவார்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த முத்தரசனிடம், சமீப காலமாக பள்ளிகளில் நடந்த பாலியல் புகார்கள், அதில் சம்பந்தப்பட்டவர்கள், இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பன உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு முத்தரசன் சொன்னதாவது: "குறிப்பிட்ட சில பள்ளிகளில் சில ஆசிரியர்கள் இப்படி தவறாக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிக கடுமையான முறையில் நடவடிக்கைகளை மிக உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சி
முதன்முதலில் ஒரே ஒரு ஆசிரியர் ராஜகோபால் மீதுதான் இந்த விஷயத்தில் புகார் வந்தது.. அவர்மீது நடவடிக்கை எடுத்ததுமே, டெல்லியில் இருந்து ஒருத்தர் சொல்றாரு "ஆட்சியை கலைச்சிருவேன்"னு.. மாணவிகளை தவறான முறையில் ஈடுபடுத்தினார் என்று ஒரு குற்றச்சாட்டு பகிரங்கமாக வெளிவந்தபிறகு, அதை அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்தால், அதை ஆதரிப்பதற்கு மாறாக, அரசாங்கத்தையே கலைச்சிருவோம்னு ஆளுநருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு ஒரு அகம்பாவம் வேரூன்றியிருக்கிறது..

சாமியார்
இந்த மிரட்டலுக்கெல்லாம் அரசு பணியாது.. சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் உறுதியாகநடவடிக்கை எடுக்கும்... எந்த சாமியாராக இருந்தாலும் சரி, முதல்வர் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.. சாமியார் குறித்தெல்லாம் இந்த அரசு கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது.. இவர்களை பார்த்து இந்த அரசு ஒருக்காலும் பயப்படாது..

பொள்ளாச்சி
அதிமுக ஆட்சி காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் ஊக்குவிக்கப்பட்டது.. அதுதான் பிரச்சனை.. பொள்ளாச்சி சம்பவத்திலேயே அந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்குமேயானால், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்திருக்காது.. அதனால்தான் இன்று தவறுகள் தலைதூக்கி உள்ளது.. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த தவறுகளை ஒட்ட நறுக்கும்.

பிராமணர்கள்
பிராமணராக பிறந்துவிட்டால் என்ன வேணும்னாலும் செய்யறதா? பிராமண பெண்ணை தவிர சூத்திர பெண், தாழ்த்தப்பட்ட பெண்கள்தானே பாதிக்கப்படுகிறார்கள்.. முதலில், இதுபோன்ற பாலியல் சமாச்சாரங்களில் சாதி, மதம், அரசியலை கலக்கவே கூடாது.. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் அவ்வளவுதான்..!" என்றார்.











Click it and Unblock the Notifications