அசீம் என்னுடைய அக்கா மகனா.. பொய் சொல்கிறார்.. வீடியோ போட்டு மறுத்த நாகை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அசீம் தனது அக்கா மகன் இல்லை என்றும் அது சுத்த பொய் என்றும் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏவான ஆளுர் ஷாநவாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் நடிகர் அசீம் கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலிருந்தே சக ஊழியர்களை மதிக்காமலே இருந்தார். குறிப்பாக விக்ரமன், ஷிவின், ஆயிஷா உள்ளிட்டோரை கடுமையான சொற்களால் விமர்சித்து வந்தார்.
யாருக்கும் மதிப்பளிக்காமல் சக போட்டியாளர்களை ஒருமையில் பேசுவது , தரக்குறைவாக பேசுவது, தன்னை பற்றி அதிகம் தற்பெருமை பேசுவது என இவர் செய்த செயல்கள் கமல்ஹாசனையே கோபத்தில் ஆழ்த்தியது.

ரெட் கார்டு
இதன் காரணமாக இரு முறை அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவங்களும் இந்த சீசனில் அரங்கேறியது. எனினும் மற்ற போட்டியாளர்கள் யாரும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் அசீம் சண்டை போட்டது டிஆர்பி ரேட்டை அதிகரித்தது. விளையாட்டு போட்டியை மக்கள் காண்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருந்தது.

இறுதி போட்டி
அதனால் அவருக்கு வாக்களித்து இறுதி போட்டிவரை மக்கள் கொண்டு சென்றனர். இறுதி போட்டியிலும் அவர் வெற்றி பெற்று பிக்பாஸ் டிராபியை தட்டிச் சென்றார். அதனுடன் ரூ 50 லட்சம் பணம், கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் விக்ரமனுடன் அசீம் ஒரு முறை வாக்குவாதம் செய்த போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்தான் எனது தாய்மாமா எம்எல்ஏவாக இருக்கிறார் என ஆளூர் ஷாநவாஸை குறிப்பிட்டு சொல்லியுள்ளார்.

ஆளூர் ஷாநவாஸ்
இந்த நிலையில் இதை மறுத்த ஆளூர் ஷாநவாஸ், அசீம் எனது அக்கா மகன் இல்லை. அவர் சொன்னது பொய் என கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில் அசீமும் நானும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால் அவர் சொன்னது போல் அவர் எனக்கு உறவுக்காரர் இல்லை. அவர் எனக்கு அக்கா மகனும் இல்லை, நான் அவருக்கு தாய் மாமாவும் இல்லை. எனக்கு இருப்பது ஒரே ஒரு தங்கைதான்.

விக்ரமன்
விக்ரமன் எங்கள் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரை எனக்கு தெரியும். ஆனால் அசீமை எனக்கு தெரியாது. இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதும் எனக்கு தெரியாது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது கூட இல்லை. மற்றவர்கள் அனுப்பிய வீடியோ கிளிப்பிங்கை வைத்துதான் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை தெரிந்து கொண்டேன்.

அசீம்
அசீம் இப்படி பேசியிருப்பதை கூட இது போன்ற வீடியோ கிளிப்பிங் மூலமாக நான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் அசீமை கண்டபடி விம்ர்சனம் செய்து வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் ஆளூரை சேர்ந்தவர். விஜேவாக தொலைக்காட்சியில் 2008 ஆம்ஆண்டு பணிக்கு சேர்ந்தார். அவரது தூய தமிழால் ரசிகர்களை ஈர்த்த அசீமுக்கு சீரியல் வாய்ப்புகள் தேடி வந்தன.

பிரபல தொடர்கள்
பிரியமானவள், தெய்வம் தந்த வீடு சீரியல்களில் நடித்துள்ள அசீம். பகல் நிலவு சீரியல் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். அந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அசீம். அதில் இவர் குறித்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். இந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டு பொய் கூறியது ஷாநவாஸ் மூலம் அம்பலமாகியுள்ளதாக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications