’ராமதாஸுக்கு தான் முழு அதிகாரம்’ என பேசிய எம்எல்ஏ அருள் பாமகவில் இருந்து நீக்கம்.. அன்புமணி அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் இருந்து எம்எல்ஏ அருளை நீக்கம் செய்து கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருள் நீக்கப்படுவதாகவும், அருளுடன் பாமகவில் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் ரா அருள் நீக்கப்படுகிறார் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

mla-arul-expelled-from-pmk-anbumani-ramadoss-announce

சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா. அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30 -இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் அருள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக எம்.எல்.ஏ அருள் ராமதாசுக்கு தான் முழு அதிகாரம் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அருள் கூறுகையில், "பதவிக்காக பெற்ற அப்பாவையே விட்டு போகிறார் அன்புமணி. எதிர்காலத்தில் அன்புமணி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக் கூடாது. பொறுப்பாளர்களை நியமிப்பதற்கும், மாற்றுவதற்கும் ராமதாசுக்கே முழு உரிமை. அப்பாவை மகன் மதித்து நடப்பது தான் தமிழ்நாட்டின் பாரம்பரியம்" என்று கூறியிருந்தார்.

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ராமதாசுக்கு பிடிக்கவில்லை. தற்போது அவர் திமுகவுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் மகன் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்.

இந்த விவகாரத்தில் தான் தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் தலைவராக நானே தொடர்வேன் என ராமதாஸ் அறிவித்து இருக்கிறார். இதற்கிடையே டெல்லி சென்றுள்ள அன்புமணி ராமதாஸ் அமித்ஷா, ஜேபி நட்டா மற்றும் தேர்தல் ஆணைய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் அருள் எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+