வீட்டுக்காரர் எம்எல்ஏவா இருந்தா என்ன.. சாந்து சட்டியுடன் 100 நாள் வேலைக்குப் போகும் பெண்ணரசி!
சென்னை: நான் எம்எல்ஏவாக இருந்தால் என்ன? எனது மனைவி நிச்சயம் 100 நாள் வேலைக்கு செல்வார் என கந்தர்வக்கோட்டை கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சின்னதுரை தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திமுக கூட்டணியில் இடம் பெற்று மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்டவர் சின்னதுரை. இவர் 35 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர்.
இரண்டாவது முறையாக அவர் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட சின்னதுரை இந்த முறை எம்எல்ஏவாகிவிட்டார். மேலும் அந்த மாவட்டத்தின் முதல் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ என்ற பெருமையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

ஓட்டு வீடு
மிகவும் எளிமையானவர் சின்னதுரை. ஓட்டு வீட்டில் மனைவி பெண்ணரசியுடன் வசித்து வருகிறார். அவர் காது மூக்கில், தாலியில் போட்டியிருக்கும் நகைகள் மட்டுமே சொந்தம். இவர் சொத்து கணக்கில் கூட தாலி, கம்மல், தோடுனு எல்லாம் சேர்த்து 1 பவுன் நகையும் 4 ஆட்டுக்குட்டிகளும் என விருப்பமனுவில் சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தவர் சின்னதுரை.

சின்னதுரை
இவரது மனைவி 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறார். இவர் வேலைக்கு செல்லமிடத்தில் அங்கிருப்பவர்கள், "உனது கணவர் எம்எல்ஏவாக போகிறார், நீ என்னடான்னா 100 நாள் வேலை திட்டத்திற்கு வந்துடறியே"னு கிண்டல் செய்தார்கள். இதை அவர் தனது கணவர் சின்னதுரையிடம் தெரிவித்தார்.

100 நாள் வேலை திட்டம்
அதற்கு அவர் நீ எதை பற்றியும் கவலைப்படாமல் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல் என்று கூறிவிட்டார். கட்சியில் பல பொறுப்புகளில் வகித்த சின்னதுரை தொகுதி மக்களுக்காக நிறைய செய்துவிட்டாராம். இனி எம்எல்ஏவாகி தொகுதி மக்களின் எஞ்சியிருக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே சின்னதுரையின் ஆசையாம்.

பொருத்தம்
இவர் தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட 12,721 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். இவர் இவரது கட்சியினர், கூட்டணிக் கட்சியினர் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரும் வாழ்த்துகிறார் என்றால் இவர் அந்த பதவிக்கு பொருத்தமானவர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications