எம்எல்ஏ கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸின் தனி பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல காமெடி நடிகர் கருணாஸ், நந்தாவில் தொடங்கி தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா உள்ளிட்ட சில படங்களை, தயாரித்தும் உள்ளார்.

இவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். கருணாஸ் கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவாடைனை தொகுதியில் அதிமுக சின்னத்தில் நிற்க சீட் வழங்கினார். இதன் மூலம் அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் கருணாஸ் எம்எல்ஏவின் தனிப்பாதுகாவலராக உள்ளவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடத்தப்பட்ட சோதனையில் கருணாஸின் பாதுகாவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கருணாஸ்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதா அல்லது அவரது உடல் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications