10-ஆம் வகுப்பு மாணவர்கள் வேண்டிய எந்த சாமியும் செய்யாததை செய்த எடப்பாடியார்- கருணாஸ்
சென்னை: அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் என்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் வேண்டிய எந்த சாமியும் செய்யாததை எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.
கொரோனா பிரச்சினையால் தேர்வு எழுத முடியாமல் போன 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். அதாவது 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் ஆல் பாஸ் போடப்பட்டது.
அது போல் கல்லூரிகளிலும் இறுதியாண்டு தேர்வை தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அது போல் தேர்வுக்காக பணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கும் ஆல் பாஸ் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரியர் மாணவர்கள் என அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள். ஆங்காங்கே எடப்பாடியை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருச்சியை சேர்ந்த ஒரு மாணவன் தனது 23 அரியர் தேர்வுகளை ரத்து செய்த முதல்வருக்கு நன்றி என தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருந்தார்.

நன்றி
தற்போது மாணவர்கள் முதல்வருக்கு நன்றி சொல்வதை போல் கொரோனாவுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அப்போது முதல்வர் பழனிச்சாமிக்கு எம்எல்ஏ கருணாஸ் புகழாரம் சூட்டி பேசினார்.

மாணவர்கள் தவிப்பு
அவர் பேசுகையில் கொரோனா பிரச்சினையால் தேர்வு எழுத முடியாமல் போன எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் கல்லூரிகளில் கடந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போன நிலையில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறதோ? என மாணவர்கள் தவித்து வந்தனர்.

ஆல்பாஸ்
அவர்களுக்கு ஜாக்பாட்டாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செமஸ்டர் தேர்வுகளில் ஆல்பாஸ் செய்ததோடு மட்டுமின்றி அரியர் வைத்திருந்த மாணவர்களையும் ஆல்பாஸ் செய்து திக்குமுக்காட வைத்து விட்டார். இந்நிலையில் அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார். 10ம் வகுப்பு மாணவர்கள் வேண்டிய எந்த சாமியும் செய்யாததை செய்தார் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications