திருவாடாணை, பூம்புகார் எம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை: திருவாடாணை தொகுதி மற்றும் பூம்புகார் தொகுதியின் எம்எல்ஏக்கள் கருணாஸ் மற்றும் பவுன்ராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 2.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தினமும் 5000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் டெஸ்டிங்கில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள், மத்திய பிரதேச முதல்வர், கர்நாடக முதல்வர், முன்னாள் முதல்வர், தமிழக ஆளுநர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாடாணை தொகுதி எம்எல்ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவரது உதவியாளருக்கு கொரோனா இருந்த நிலையில் கருணாஸும் இன்று பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அவர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அது போல் பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications