சைதாப்பேட்டை தெருவில்.. ஸ்டூலை இழுத்து போட்டு.. மக்களுக்கு வாட்டர் சப்ளை செய்த திமுக மா.சு!
சைதை மக்களுக்கு மா. சுப்பிரமணியன் தெரு தெருவாக தண்ணீர் வழங்கி வருகிறார்
Recommended Video
சென்னை: சைதாப்பேட்டை தெருவில் ஒரு ஸ்டூலையும் இழுத்து போட்டு உட்கார்ந்து, தொகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறார் திமுகவின் மா.சுப்பிரமணியன்!
சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்.சென்னை ஐகோர்ட் வக்கீல்!

எப்போதும் படுசுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டே இருப்பவர் மா.சு.தான் என்ற பெயர் பெற்றவர். இவர் மேயராக இருந்தபோது பல செயல்பாடுகள் சென்னையின் கவனத்தை ஈர்த்தது. சைதாப்பேட்டை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நபர்தான் மா.சு! தொகுதி முழுவதும் இவருக்கு அத்துப்படி!
சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் கடும் வெயிலும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதால், திமுகவினர் தங்களால் இயன்ற வரை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குங்கள்" என்று திமுக தலைவர் சொல்லி இருந்தார். இதனை ஏற்று ஒவ்வொரு தொகுதி, மாவட்டங்களில் திமுகவினர் தண்ணீர் சப்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எம்பி, எம்எல்ஏ, நிர்வாகி என்ற பேதமெல்லாம் இல்லை. யாரால் தண்ணீர் தர முடிகிறதோ, அவர்களே நேரடியாக வந்து மக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள்.
அப்படித்தான் சைதாப்பேட்டையிலும் நடந்து வருகிறது. அதுவும் மாசு இருக்கிறாரே..தெருவிலேயே ஒரு ஸ்டூலை போட்டு உட்கார்ந்து குழாயில் தண்ணீர் சப்ளை செய்கிறார். தண்ணீரை தெருவில் கொண்டு விட்டு விட்டு சென்று விட்டால் தண்ணீரை விற்பது போன்ற தேவையற்ற பிரச்சினைகள் வருவதால், அவரே நேரடியாக உட்கார்ந்து தண்ணீர் வழங்குகிறாராம்!
எவ்வளவு நேரமானாலும் இந்த வேலைக்கு சளைப்பதே இல்லை. தண்ணீர் விநியோகம் செய்துவிட்டு, அதோடு சும்மா இருப்பதில்லை. ஒவ்வொரு தெருவிலும் சென்று தண்ணீர் கிடைத்ததா என்று அக்கறையுடன் கேட்டு வருகிறாராம்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications