டிவி நேரலை எதிரொலி! அரட்டையும் இல்லை சிரிப்பும் இல்லை! அமளியின்றி அமைதியான கூட்டத்தொடர்!
சென்னை: தமிழக வரலாற்றில் முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டதால், அவையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டதை அறிய முடிந்தது.
உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கும் போது சக உறுப்பினர்களின் அரட்டைகளையோ, கேலி கிண்டல் தமாஷ்களையோ சட்டமன்றத்தில் பார்க்க முடியாதது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தாமதமாக வருவது, பேரவை நிகழ்வின் போது அடிக்கடி வெளியே எழுந்து செல்வது போன்றவற்றையும் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்துவிட்டனர்.

டிவி நேரலை
தமிழக அரசியல் வரலாற்றில் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என்பது. இந்நிலையில் அதனை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 2 நாட்களாக லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.

உலகம் முழுவதும்
இதன் மூலம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் பெருங்குடி மக்கள் சட்டப்பேரவையில் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை வீட்டின் வரவேற்பரையில் அமர்ந்தே அறிந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அனைத்துக்கட்சிகளிலும் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என ஆசைப்பட்டு அது நிறைவேறாத பலருக்கும் இந்த நேரலை சற்று ஆறுதலை கொடுத்திருக்கும் என்றே கூறலாம். சட்டமன்றத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்பதை பாமரனும் அறிந்துகொள்ள இந்த நேரலை வழிவகுத்துள்ளது.

மிகுந்த பொறுப்பு
இதனிடையே முந்தைய கூட்டத்தொடர்களை காட்டிலும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்று மாறுபட்டிருந்தது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களை தொலைக்காட்சி மூலம் மக்கள் கண்காணிக்கிறார்கள் என்பதை உணர்ந்து மிகுந்த கவனமுடன் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை பேரவையில் பேசி தேவையற்ற சலசலப்புகளை தவிர்த்ததை காண முடிந்தது. அதேபோல் சட்டமன்றத்தில் இருந்து வெளியே எழுந்து செல்வதும், தங்களுக்குள் சிரித்துப் பேசுவதும் இந்த முறை குறைந்திருந்தது.
Recommended Video

பட்ஜெட் கூட்டத்தொடர்
வரும் மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பேரவை நிகழ்வுகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் நேரலையில் பேரவை நிகழ்ச்சிகளை காண்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications