அவர் இதயம் இன்னும் டிராக்கில்தான் இருக்கிறது.. அஜித் செம.. புகழ்ந்து தள்ளும் எம்எல்ஏ டிஆர்பி ராஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித்தின் இதயம், ஆர்வம் எல்லாம் இன்னும் கார் ரேஸ் டிராக்கில்தான் உள்ளது என்று மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி விளையாட்டு துறை மீதும் தீவிர ஆர்வம் கொண்டவர். பைக் ரேஸ், கார் ரேஸ், டிரோன் உருவாக்கி பயிற்சி அழிப்பது, போட்டோகிராபி என்று பல்வேறு துறைகளில் அஜித் திறமை கொண்டவர்.

சினிமா மட்டும் வாழ்க்கை என்று இல்லாமல் சினிமாவிற்கும் வெளியே பல துறைகள் மீது கவனம் செலுத்தி வருகிறார். இதனால் இவரின் ரசிகர்களும் பல்வேறு துறைகளில் ஆர்வமுடன் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

பைக் ரேஸ் கலந்து கொண்டார்

பைக் ரேஸ் கலந்து கொண்டார்

இவர் பார்முலா ஒன் கார் பந்தயங்களில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக இப்போது கார் ரேஸ்களில் கலந்து கொள்வது இல்லை. ஆனாலும் ஹெலிகாப்டர் ஓட்டுவது, விமான ஓட்டுநர் லைசன்ஸ் வைத்திருப்பது, துப்பாக்கி சூடு போட்டிகளில் கலந்து கொள்வது என்று சுறு சுறுப்பாக அஜித் இயங்கி வருகிறார்.

வைரலாகி வருகிறது

வைரலாகி வருகிறது

தற்போது நடிகர் அஜித்தின் இரண்டு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் நடிகர் அஜித், டி20 கிரிக்கெட் போட்டி குறித்து பேசி உள்ளார். 10 வருடங்களுக்கு முன் அஜித் அந்த வீடியோவில் டி20 கிரிக்கெட் போட்டிதான் இனி எதிர்காலம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். டி20 போட்டிகள் பெரிதாக வரும் முன்பே அதை சரியாக அஜித் கணித்து இருந்தார்.

வேறு வீடியோ

வேறு வீடியோ

வேறு ஒரு வீடியோவில் பேசிய அஜித், தனது கார் ரேஸ் ஆர்வம் குறித்து பேசினார். கார் ரேஸ் செய்ய தனக்கு மிகவும் பிடிக்கும். என்னை பார்த்து மற்றவர்களும் விளையாட்டு துறை மீது ஆர்வம் செலுத்த வேண்டும். என்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி விளையாட்டு துறையை மக்கள் இடையே கொண்டு செல்ல நினைக்கிறேன், அஜித் இந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஷேர் செய்தார்

ஷேர் செய்தார்

இந்த வீடியோவை மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா பகிர்ந்து உள்ளார். நடிகர் அஜித்தின் இதயம் இன்னும் டிராக்கில்தான் இருக்கிறது. விளையாட்டு மீதான அவரின் காதலை இது உணர்த்துகிறது. இவரை போலவே மற்ற பிரபலங்களும் தங்கள் பிரபலத்தை பயன்படுத்தி விளையாட்டு துறையை ஊக்குவிக்க வேண்டும், என்று டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+