சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் நெருப்புடா.. நெருங்குடா பார்ப்போம்.. பொசுக்கிருவேன்.. பாஜகவை விளாசிய விஜயதாரணி!

Google Oneindia Tamil News

சென்னை: நான் நெருப்புக்கு என்னை பாஜக நெருங்க முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு கட்சி தாவும் படலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத்துடன் மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது பாஜகவில் இணைந்துவிட்டார். இதையடுத்து அவர் ராஜ்யசபா எம்பியாகவும் தேர்வாகிவிட்டார்.

இதையடுத்து செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விட்டு தற்போது பாஜகவில் இணைந்துவிட்டார். மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ரஞ்ஜித் தேஷ்முக் காங்கிரஸில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் உள்ளார்.

பீகார் தேர்தல்: மேலும் 35 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக! அக். 22ல் பிரதமர் மோடி பிரசாரம் பீகார் தேர்தல்: மேலும் 35 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக! அக். 22ல் பிரதமர் மோடி பிரசாரம்

பதவி

பதவி

அது போல் ஹரியாணாவை சேர்ந்த சவுத்ரி பிரேந்திர சிங், அப்போதைய முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுடனான பனிப்போரால் அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சர் பதவியையும் வகித்துவிட்டார். அது போல் ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

அது போல் ராஜஸ்தான் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டும் கிளர்ச்சியை உண்டு செய்தார். அவரும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவுக்கு தாவுவதாக இருந்தது. எனினும் ராகுலும் பிரியங்காவும் அவரை சமாதானப்படுத்தி காங்கிரஸில் தக்க வைத்துக் கொண்டார்கள்.

பாஜகவில் குஷ்பு

பாஜகவில் குஷ்பு

அது போல் காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு சுந்தரும் கட்சி நிர்வாகிகளுடனான பனிப்போரால் பாஜகவுக்கு தாவிவிட்டார். இப்படியாக காங்கிரஸில் இருந்து பாஜகவை விமர்சித்த இவர்கள் இன்று பாஜகவுக்கே சென்றுவிட்டனர்.

நெருப்பு

நெருப்பு

அது போல் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியும் அதிருப்தியில் இருப்பதாகவும் பாஜக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவரிடம் கேட்ட போது நான் நெருப்பு.. பாஜக என்னை நெருங்கவே முடியாது என கூறிவிட்டார்.

English summary
MLA Vijayadharani says that BJP will not come closer to me and she is fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X