அரசு ஊதியத்தில் தொகுதிக்கு ஒரு செயலாளர்! தங்களுக்கு ஒரு பி.ஏ.! சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த டிமாண்ட்
சென்னை: அரசு ஊதியத்தில் தொகுதிக்கு ஒரு செயலாளரும், தங்களுக்கு ஒரு நேர்முக உதவியாளரும் வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெறவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதனிடையே ஏற்கனவே ஒன்றிய பெருந்தலைவர்களுக்கு வழங்கப்படுவது போல் தங்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முதலமைச்சரை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நேற்று காலை, மாலை என இரண்டு ஷெசன்களாக சட்டசபை நடைபெற்றது.
இரவு 9 மணி வரை நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் முன் வைத்த கோரிக்கைகள் பற்றி பட்டியலிட்டுக் கொண்டு வந்தார் துரைமுருகன்.
சட்டசபை கூட்டத் தொடரை ஊட்டியில் நடத்த வேண்டும் என பாமக எம்.எல்.ஏ. அருள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதை பழைய நிகழ்வுகளுடன் சுட்டிக்காட்டி கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்ற வரலாற்றை கூறிய அவர், அந்தக் காலத்தில் ஏசி வசதி இல்லாததால் அப்படி நடந்ததாகவும் இப்போது ஊட்டியை விட அதிக குளிரில் ஏசி இயக்கப்பட்டு சபை நடந்து வருவதாக கூறினார்.

மேலும், அரசு ஊதியத்தில் தொகுதிக்கு ஒரு செயலாளரும், தங்களுக்கு ஒரு உதவியாளரும் வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்றும் இது சாதாரண விஷயம் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
அதேபோல் எம்.எல்.ஏ.க்கள் ஹாஸ்டலில் வைஃபை வசதி கேட்டதன் அடிப்படையில் அதற்கு ஒன்றே கால் கோடி நிதி ஒதுக்கப்பட்டு கையெழுத்துக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications