சீட் இல்ல.. இதை வாங்கிக்கங்க.. “ஹஜ் கமிட்டி தலைவர் பதவி”.. ஜவாஹிருல்லாவை சமாதானப்படுத்திய ஸ்டாலின்!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சீட் கேட்டு வந்த நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ அப்துல் சமது, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ அப்துல் சமது ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஹஜ் குழுசட்டம், 2002-ன்படி, ( மைய சட்டம் 35/2002) தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அரசாணை நிலை எண் 44, பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை நாள் 15.06.2023-ல், 16 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, திருத்தியமைக்கப்பட்டது.

ஹஜ் கமிட்டி தலைவர்: தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் (ம) வனத்துறை கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத் துறையின் செயலாளர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக பி. அப்துல் சமத், எம்.எல்.ஏ., அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசாணை (ப) எண் 22 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, நாள் 22.02.2024-ன்படி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் அப்துல் சமது.
திமுக கூட்டணி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்தவகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, தங்களுக்கு ஒரு எம்.பி சீட் ஒதுக்க வேண்டும் என மமக வலியுறுத்தி வந்தது.
சமாதானம் செய்த ஸ்டாலின்: அண்மையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் சென்னையில், அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக கண்டிப்பாக மமக கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏவுக்கு ஹஜ் குழு தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திமுக கூட்டணியில் போட்டியிட சீட் கேட்ட ஜவாஹிருல்லாவை சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம், இப்போதைக்கு ஹஜ் தலைவர் பதவி தருகிறேன் எனக் கூறி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் சமாதானம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? -
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி -
பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
புதுமைப் பெண் திட்டம்! ரூ.1000 லிருந்து ரூ.1500 உயர்த்த திமுக வாக்குறுதி! இப்படி ஒரு சூப்பர் காரணம்? -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா!












Click it and Unblock the Notifications