குடியரசு தின விழா! காந்தியடிகளுக்கு பிடித்த பாடலை நீக்குவதா? மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
சென்னை: குடியரசு தின விழா நிகழ்வின் இறுதியில் பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பின் போது இசைக்கப்படும் 'அபைட் வித் மீ' பாடலை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளா மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் அபைட் வித் மீ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அபைட் வித் மீ
குடியரசு தின விழா நிகழ்வுகளின் இறுதியில் பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பில் இசைக்கப்படும் 'அபைட் வித் மீ' என்று காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடலை நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். 1950ம் ஆண்டு முதல் விஜய் சௌக் பகுதியில் ஜனவரி 29 அன்று நடைபெறும் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வில் 'அபைட் வித் மீ' இசைக்கப்பட்டு வந்துள்ளது.

71 ஆண்டுகள்
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் என்பதால் தான் 1950ல் இந்த பாடல் பாசறைக்கு திரும்பும் முப்படைகளின் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டு கடந்த 71 ஆண்டுகளாக இசைக்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் பாடல் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். வீர ஈகியர்களான நமது படைவீரர்களை நினைவு கொள்வதற்காகவே இந்த பாடல் இசைக்கப்படுகின்றது.

காந்தியடிகள்
காயப்பட்ட உள்ளங்களை தேற்றுவதைத் தான் இந்தப் பாடல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பாடலை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைப்பது ஒன்றிய அரசின் குறுகிய பார்வையை வெளிப்படுத்துகின்றது. கோட்சேவைப் புகழும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாஜக காந்தியடிகளை புறந்தள்ள எடுத்துவரும் பல மறைமுக முயற்சிகளில் ஒன்றாகவே இந்தப் பாடல் நீக்க முடிவும் அமைந்துள்ளது.

கோட்சே சாய்வு
முப்படைகளின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பாலிவுட் பாடல் ஒன்றுக்கு கடற்படை வீரர்கள் நடனமாடி இசைக்கும் பாடல் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் இணையதளம் அளிக்கும் தகவல் மோடி அரசின் தராதரத்தை அம்பலப்படுத்துகின்றது. காந்தியடிகளுக்குப் பிடித்தமான பாடல் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என கோட்சே சாய்வு ஒன்றிய அரசை இந்திய மக்களின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications