''விசாரணை அமைப்புகளை வேட்டை நாய்களை போல் ஏவும் மத்திய அரசு''! செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக ஜவாஹிருல்லா
சென்னை: அரசியல் எதிரிகள் மீது சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை வேட்டை நாய்களை போல் மத்திய அரசு ஏவிவிடுவதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது அராஜகம் எனக் கூறியிருக்கிறார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;
''அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை வேட்டைநாய்களைப் போல ஏவி விடுவது ஒன்றிய பாஜக அரசின் வழக்கமாக இருந்து வருகிறது.

அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் ஒன்றிய அரசு காலில்போட்டு மிதித்து வருகிறது.
அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது அமலாக்கத் துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஒன்றிய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடாகவே இச்செயல் அமைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையும். தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பாஜகவின் கனவு நனவாகாது.''
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications