கையில் டார்ச்லைட்.. சிம்பிளான பேச்சு.. அசராத பிரச்சாரம்.. பொள்ளாச்சியை கலக்கும் மூகாம்பிகை
கையில் டார்ச் லைட்டுடன் வாக்கு சேகரித்து வரும் மூகாம்பிகை ரத்னம்
Recommended Video

சென்னை: "போன மார்ச் மாசம்தான் கட்சியில சேர்ந்தேன்.. மய்யத்தின் வேட்பாளர் தேர்வே வித்தியாசமாக இருந்தது.. கட்சியின் கட்டுப்பாடும், ஒழுக்கமும்தான் என்னை ரொம்பவும் சுண்டி இழுத்தது" என்று சொல்கிறார் மக்கள் நீதி மய்ய பொள்ளாச்சி வேட்பாளர் மூகாம்பிகை ரத்னம்!
பல வருடமாக சமூக அக்கறையில் தன்னை திணித்து கொண்டு வந்தாலும், அதனை முழுமையாக வெளிப்படுத்தும் களமாக அவர் தேர்ந்தெடுத்தது மக்கள் நீதி மய்யத்தைதான்!
குறிப்பாக மய்யம் மூலம் பொள்ளாச்சி சம்பவத்தை தெரியப்படுத்தினாலும், பொள்ளாச்சிக்கு நன்கு தெரிந்த முகம்தான் இந்த மூகாம்பிகை ரத்னம்!

பைக் ரேஸர்
பொறியியல் பட்டதாரி.. பெடலில் கால் எட்டாத போதே பைக் ஓட்ட பழகியவர்.. பைக் ரேஸர் ஆகவும் உயர்ந்தவர்.. அதில் சாதனையும் படைத்தவர்.. சமீபத்தில் கட்சியில் இணைந்தாலும் இவரது திறமையை மதித்து கமல் சீட் தந்துள்ளது பாராட்டத்தக்கது!

அறியாமை
கமல் அளித்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தொகுதிக்குள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார் மூகாம்பிகை. பெண் பிள்ளைகள் கபடமற்றவர்களாக மட்டுமில்லை.. இன்னும் அறியாமையிலும் இருக்கத்தான் செய்கிறார்கள், அதனால் பெண் பாதுகாப்புதான் எங்களது முக்கியமான தேர்தல் வாக்குறுதி என்று செல்லுமிடமெல்லாம் சொல்லி செல்கிறார் இவர்!

எளிமையான தோற்றம்
பெரிய அளவு ஒப்பனை இல்லாத கலையான முகம்.. எளிமையான தோற்றம்... கட்சி சின்னத்தை கையில் வைத்து கொண்டு பிரச்சாரத்தில் இவர் ஈடுபடுவதே வித்தியாசமாகதான் உள்ளது. கையில் ஒரு டார்ச் லைட்டுன் கண்ணில் பட்டவர்களிடம் கேஷூவலாக பேசுகிறார்.

ஓடும் பஸ்
மார்க்கெட்டில் புகுந்து காய்கறி வாங்கி கொண்டிருந்தவர்களிடமும், வீட்டு வாசப்படியில் உட்கார்ந்து இருப்பவர்களிடமும், யதார்த்ததை பேசியபடியே ஓட்டு கேட்கிறார். திடீரென ஓடும் பஸ்ஸில் ஏறிக் கொண்டு, பயணிகளிடம் பேச்சு கொடுத்து வாக்கு கேட்கிறார்.

ஓட்டு வங்கி
ஒரு பாட்டி ரோட்டோரத்தில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். அவரிடம் அனுசரணையாக பேசிக் கொண்டு நிற்கிறார். எப்படியும் பொள்ளாச்சியில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை எளிமையான அணுகுமுறையால் இவர் பெற்று விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications