காலாவதியான எலெக்ஷன் ஸ்டிராடஜி.. இதுதான் அரசியல் 'தசாவதாரமா' மிஸ்டர்.கமல்?
சென்னை: சினிமாவில் எப்போதும் யாருமே யோசிக்காத, யாரும் தொடாத கான்செப்டுகளை யோசித்து ரசிகர்களின் ஆச்சர்யங்களை வென்றதால் தான் கமல் 'உலகநாயகன்'. ஆனால், அரசியலில் அப்படி யோசிக்கிறாரா?
எந்த பக்கமும் சாராமல், மய்யத்தில் நிற்பதே 'மக்கள் நீதி மய்யம்' என்று கட்சியைத் தொடங்கி, இன்று தனது கட்சியை 'கன்னி' சட்டமன்ற தேர்தலில் களம் இறக்கியுள்ளார் கமல்ஹாசன்.
கிராமங்களில் இக்கட்சிக்கு வலுவான அடித்தளம் இல்லை என்றாலும், நகரங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளார் நம்மவர். அதை நம்பியே இந்த தேர்தலிலும் களமிறங்கியுள்ளார்.

கமல் ரெஃபரென்ஸ்
சினிமாவில், கமல்ஹாசன் போடாத வேஷம் என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்ன? இரட்டை வேடம், மூன்று வேண்டாம், ஆறு வேடம் என்று வெரைட்டி கட்டி வேஷம் போட்டவர், இறுதியில் 'தசாவதாரமாக' உருமாறி ரசிகர்களை மிரள வைத்தார். இன்றைய தமிழ் சினிமா உலகில் எப்பேற்ப்பட்ட நடிகனாக இருந்தாலும், ஒரு காட்சியிலாவது கமல்ஹாசனின் Reference இல்லாமல் நடிக்க முடியாது. அந்தளவுக்கு அனைத்து வேஷங்களையும், கற்பனைகளையும் லீசுக்கு எடுத்து வைத்திருக்கிறார்.

10 வருடம் பின்னோக்கி
ஆனால், அரசியலில் கமல்ஹாசன் அந்தளவுக்கு அட்வான்ஸாக யோசிக்கிறாரா? என்றால் அவரது செய்லபாடுகளை பார்த்தால், 10 வருடம் பின்னோக்கி போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சமக, ஐஜேகே உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தனது கட்சி வேட்பாளர்களையும் அறிவித்த பிறகு, தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார் கமல்ஹாசன். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல் எதிர்வரும் தேர்தலில் ஒரு 'X-Factor'-ஆகக் கூட இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

சிலம்பம் சுற்றுகிறார்
சரி.. 'உலகநாயகன்' கமல்ஹாசன் ஆச்சே! ரொம்ப Advance Thinker ஆச்சே... பிரச்சாரத்தில் ஏதாவது புதுமையாக வேற லெவலுக்கு செய்வார் என்று பார்த்தால், சாலையில் மாஸ்க் அணிந்து கொண்டு, வாக்கிங் போகிறார். பிறகு சிலர் அவரை அடையாளம் கண்டு வந்து பேசி வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். டீக்கடைக்கு போகிறார். அங்கு நான்கு பேரிடம் பேசுகிறார். மீன் மார்க்கெட் போகிறார். பிறகு பேருந்தில் ஏறி மக்களுடன் பயணம் செய்கிறார். ஏர்போர்ட்டுக்கு ஆட்டோவில் போகிறார். வழியில் மக்களுக்கு கைக் கொடுக்கிறார். பிறகு டிரைவருக்கு காசு கொடுக்கிறார். இவ்ளோ ஏன் சிலம்பம் கூட சுற்றுகிறார். இவற்றையெல்லாம் ஒருவர் ஃபோட்டோ எடுக்கிறார்.

ஜித்து வேலை
இதெல்லாம் தமிழகத்தில் பத்து, பதினைந்து வருடத்துக்கு முன்பிருந்த தேர்தல் நேரத்தில் மட்டுமே நடைபெறும் தேர்தல் நேர ஜிம்மிக்ஸ் ஆச்சே கமல் ஜி. இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள். பஸ்ஸில் போவது, டீக்கடைக்கு சென்று டீ குடிப்பது, வாக்கிங் போவது போன்ற ஜித்து வேலைகளை செய்தவர்களே இப்போது அதை விட்டுவிட்டார்கள். அது Expired ஆன எலெக்ஷன் ஸ்டிராடஜி கமல் ஜி. உங்களிடம் இருந்து மக்கள் இதையா எதிர்பார்க்கிறார்கள்? என்கின்றனர்.

அப்போ ஏன் வரல?
மக்களுடன் Mingle ஆக வேண்டும் என்ற நோக்கில் கமல்ஹாசன் இதனை செய்வதாக இருந்தாலும், கட்சி தொடங்கி முழுதாக 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இதற்கு முன், இப்படி மக்களோடு மக்களாக பழக வெளியே வராத கமல்ஹாசன், இப்போது தேர்தல் சமயத்தில் மட்டும் வந்து மக்களோடு மக்களாகிறேன் என்றால், மற்ற கட்சியினருக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லையா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தனி ரகம்
'மாற்றத்தை கொடுக்க வருகிறேன்' எனும் நீங்கள், பிரச்சாரத்திலேயே எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லையே? நீங்கள் எப்படி திமுக, அதிமுகவுக்கு சரியான மாற்றாக இருப்பீர்கள் என மக்கள் நம்புவார்கள்? என்றும் கேட்கின்றனர். கமல்ஹாசனுக்கு என்று தமிழகத்தில் ஒரு நல்ல இமேஜ் உள்ளது. அதை இதுபோன்ற காலாவதியான எலக்ஷன் யுக்தியால் கமல் வீணடிக்காமல், 'நாம எப்போதும் தனி ரகம்' என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே அவரை முழுமையாக நம்பும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications