மநீம-வின் ஒரே நம்பிக்கையும் 'குளோஸ்'.. கமல் தோல்வி - கடைசி நேரத்தில் வென்ற வானதி
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், கடும் இழுபறிக்கு பிறகு, கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற, கமல்ஹாசன் தோல்வி அடைந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021ல் திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். அண்ணா, கலைஞருக்கு பிறகு திமுக சார்பில் ஸ்டாலின் முதல்வராகிறார்.
அதேசமயம், இரு கழக கூட்டணிகளை தவிர்த்து மற்ற கட்சிகளில், மக்கள் நீதி மய்யம் மட்டும் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது. அதுவும் இப்போது பறிபோய்விட்டது.

தனிப் பெரும்பான்மை
தற்போது இரவு 9:30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகளில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய மூன்றும் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.

முதலில் பின்னடைவு
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில், இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிக நேரம் முன்னிலையில் இருந்தவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அதன்பிறகு பிற்பகலில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னிலை பெறத் தொடங்கினார்.

களத்தில் வானதி சீனிவாசன்
எனினும், பிறகு மீண்டும் கமல்ஹாசன் லீடிங் பெற்றார். நட்சத்திர அந்தஸ்து கொண்ட இத்தொகுதியில், கமல் - வானதி இடையே கடும் மோதல் நீடித்தது. வானதியை பொறுத்தவரை செல்வாக்கு நிறைந்த தொகுதி இது. நிச்சயம் அவர் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம், கமல் இதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த பின், களம் சூடானது.

கணக்கை தொடங்கிய மநீம
தேர்தல் பிரச்சாரங்களில் போதும், கமல் - வானதி இடையே காரசார வார்த்தை பரிமாற்றங்கள் இருந்தன. 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியிடாமல், கட்சியை மட்டும் களமிறக்கிவிட்டிருந்த கமல், இந்த சட்டமன்ற தேர்தலில், முதன் முதலாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்தார். அதற்கு ஏற்றார் போல். துவக்கமும் அவருக்கு சாதகமாவே இருந்தது. ஆனால், கிளைமேக்சில் வானதி 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. அதேசமயம், பாஜக தமிழகத்தில் இருந்து மற்றொரு எம்.எல்.ஏ.வை சட்டமன்றத்திற்கு அனுப்ப தயாராகியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications