நம்பிக்கைத் துரோகி.. பொரிந்து தள்ளிய கமல்ஹாசன்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. என்ன நடந்தது?
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி ஒருவர் சமீபத்தில் கட்சி மாறியதால் அதன் தலைவர் நடிகர் கமல் ஹாசன் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.
மக்கள் நீதி மய்யத்தின் ஐ.டி.விங் செக்ரட்டரியாக இருந்த கிருபாகரன், சமீபத்தில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். கிருபாகரன் அதிமுக பக்கம் சென்றது கமலுக்கு கடும் கோபத்தை உருவாக்கி விட்டதாம்.

நம்பிக்கைத் துரோகி என்று தனது கோபத்தை காட்டியிருக்கிறார் கமல். ம.நீ.மையத்தின் ஐ.டி.விங்கு நிர்வாகிகள் அனைவரும் கிருபாகரனால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களையும் அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் கிருபாகரன்.
முக்கிய நிர்வாகி: இந்த நிலையில், ஐ.டி.விங்கை பாதுக்காக்கவும், நிர்வாகிகளை தக்க வைக்கவும் ம.நீ.ம.த்தின் ஐ.டி. விங்க் செக்ரட்டரியாக ஒருவரை நியமிக்க திறமையான நபர்களை தேடி வருகிறார் கமல். இதனையறிந்த அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் ஐ.டி. விங்கில் நியமிக்கப்பட்டு பிறகு ஜெயலலிதாவால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட ஒருவர், கமலை சந்திக்க தொடர் முயற்சியில் இருக்கிறார்.
கமல் ஹாசன் திமுக: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப நாட்களாக தெரிவித்து வருகிறார். அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.
இந்திய கூட்டணியில் இணைந்து திமுக தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கமல்ஹாசன்: கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட தமிழ்நாட்டில் இந்த இந்திய கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது.
கோவையில் போட்டி: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதை உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை இந்த வாரம் இறுதியில் கமல்ஹாசன் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் ஏற்கனவே கோவையில் போட்டியிட திட்டமிட்டுள்ள அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆ. ராசா - எல் முருகன் இடையே போட்டி நிலவும் பட்சத்தில் இங்கே அண்ணாமலை போட்டியிடும் பட்சத்தில்.. அவருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
வேறு தொகுதியா? : கோயம்புத்தூர் இல்லையென்றால் பாரி வேந்தர் தொகுதியில் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வந்தார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வந்தார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.
இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தர் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார். அதோடு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில்தான் கோவையில் மீண்டும் போட்டியிட சிபிஎம் விரும்பும் பட்சத்தில்.. பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல்.. கமல்ஹாசன் இங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு, இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க காங்கிரசுக்கு திமுக பிரஷர் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications