மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!!
மத்திய சென்னையில் வேட்பாளர் கமீலா நாசர் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: இன்னும் நேர்காணல் முடியலை, வேட்பாளர்களும் முடிவாகலை. அதுக்குள்ள மக்கள் நீதி மய்ய போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். பிறகு நல்லவர்கள் வந்து இணையலாம் என்று லைட்டாக ஒரு பிட் போட்டு பார்த்தார்.
ஆனால் இதுவரை யாரும் போய் அங்கு இணையவில்லை. இப்போதைக்கு ஆம்ஆத்மி மட்டும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

முதல் வெற்றி
இருந்தாலும் விருப்ப மனு தாக்கல், தேர்தல் சின்னம் என்ற இந்த இரண்டு விஷயங்களும் நல்லபடியாக முடிந்துள்ளன. இக்கட்சி சார்பாக இதுவரை 1137 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவாம். கட்சி ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆன நிலையில், கமலுக்கு கிடைத்த முதல்வெற்றியே இதுவாகத்தான் பார்க்கப்படுகிறது

பரபரப்பு போஸ்டர்
ஆனால் இதுவரை கமல் இதுதான் எங்கள் கூட்டணி, இத்தனை பேர் போட்டி, இவைதான் எங்கள் தொகுதிகள் என்று எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் மத்திய சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

டார்ச்லைட்
அதில் "நேர்மையாளர் Dr. கமல்ஹாசனின் கரம் பற்ற ஆதரிப்பீர்.. மத்திய சென்னை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி கமீலாநாசர் அவர்களை ஆதரித்து டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிப்பீர்.. நமது சின்னம் டார்ச்லைட்" என்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பெரிய சைஸ் போட்டோவில் கமலும், சிறிய சைஸ் போட்டோவில் கமீலா நாசரும் உள்ளனர். கமீலா எப்போது வேட்பாளர் ஆனார் என்றும், இப்படி போஸ்டர் அடித்து ஒட்டிய விஷயம் கமலுக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை.

அதற்குள் போஸ்டரா?
ஆனால் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சியிலும் எந்த வேட்பாளரும் இப்படி போஸ்டர் அடித்து ஒட்டாத நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் இந்த வேட்பாளர் போஸ்டரை மக்கள் ஆர்வம், மற்றும் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர். எனினும் விரைவில் வேட்பாளர், தொகுதிகள் சம்பந்தமாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications