6 பேர்தான்.. ஆனா கோட்டையே குலுங்கும்.. "விஸ்வரூப என்ட்ரி" தரும் கமல்?.. மநீமவை குஷிப்படுத்திய சர்வே!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக மிகப்பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இதில் மக்கள் நீதி மய்யம் புதிய அணியை உருவாக்கி தேர்தலில் களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் ஐஜேகே, சமகவிற்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் மீதமுள்ள 154 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

கணிப்பு
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக மிகப்பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்படி நேற்று வெளியான ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பில் திமுகதான் மீண்டும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மக்கள் நீதி மய்யமும் தங்கள் கால் தடத்தை வலுவாக பதிக்க போகிறதாம்.

மக்கள் நீதி மையம்
அதன்படி மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 2-6 இடங்களை பெற வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கும், பலம் மிகுந்த புதிய மாநில கட்சியாக உருவெடுக்கும் 7%க்கும் அதிகமான வாக்குகளை பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்
முன்னதாக வெளியான டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பிலும் இதே போல் மக்கள் நீதி மய்யம் 7%வாக்குகளை பெறும், அதிகபட்சம் 7 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இன்னொரு கருத்து கணிப்பும் இதே போல தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.. 6 இடங்களை வெல்வது மகிழ்ச்சிதான்.

அதிக இடங்கள்
ஆனால் 6 இடங்களை விட அதிகமாக நாங்கள் வெற்றிபெறுவோம். எங்களுக்கு ஆதரவாகவே களநிலவரம் உள்ளது. கணிப்பில் இருப்பதை விட அதிக வாக்கு சதவிகிதத்தை நாங்கள் பெறுவோம். 6 பேரை அனுப்பினாலும் நாங்கள் கண்டிப்பாக கோட்டையில் பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உறுதியாக கூறுகிறார்கள்.

முழு கணிப்பு
ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பின் படி
- திமுக கூட்டணி 43% வாக்குகள் பெறும், 161-169 இடங்கள் பெறும்
- அதிமுக கூட்டணி 30.6% வாக்குகள் பெறும், 53-61 இடங்கள் பெறும்
- அமமுக கூட்டணி 1-5 இடங்களில் வெற்றிபெறும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications