சிக்னல் கொடுத்த கமல்.. உடனே ஏற்றுக்கொண்ட ஸ்டாலின்.. நெருங்கி வரும் மக்கள் நீதி மய்யம் - திமுக!
திமுக சார்பாக இன்று சென்னையில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யமும் கலந்து கொள்ள உள்ளது.
Recommended Video
சென்னை: திமுக சார்பாக இன்று சென்னையில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யமும் கலந்து கொள்ள உள்ளது.
இன்று சென்னையில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திமுக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்னையில் பிரம்மாண்ட ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த சட்டத்தின் சிக்கல்களை இவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.அனைத்து கட்சிகளும் சேர்ந்து சென்னையில் பெரிய கண்டன பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன்
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், குடியுரிமை சட்ட திருத்தம் என்பது தேசிய பிரச்சனை. அதற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சட்ட ரீதியாக போராடும். இந்த பிரச்னையை முடிவிற்கு கொண்டு வரும் வரை நாங்கள் போராடுவோம்.

பாஜக அரசு
ஜனநாயகத்தை பாஜக அரசு தாக்கிவிட்டது. அமித் ஷா தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் மாணவர்கள் போராட்டம் முன் அவரின் திட்டங்கள் எதுவும் வெற்றிபெறாது. மாணவர்கள்தான் கடைசியில் வெற்றிபெறுவார்கள்.

சென்னை
திமுக சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ள தயாராக இருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக எல்லோரிடமும் இணைந்து போராட தயாராக இருக்கிறோம். திமுக அழைத்தால் செல்வோம், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

அழைத்தனர்
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த பேச்சை கேட்டதும் திமுக சார்பாக அவருக்கு அழைப்பு சென்றுள்ளது. திமுக இன்று நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமே கலந்து கொள்வதாக இருந்தது. அனைத்து கட்சி கூட்டமாக இருந்தாலும் இது எதிர்க்கட்சி கூட்டம் என்ற வகையில் நடப்பதாகவே இருந்தது.

மக்கள் நீதி மய்யம்
ஆனால் தற்போது மக்கள் நீதி மய்யமும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யமும், திமுகவும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. தற்போது இவர்கள் ஒன்றாக ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த பிரச்சனை இரண்டு கட்சிகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications