இதுதான் கமல்.. முதல் பட்டியலிலேயே 2 முஸ்லீம் வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்து அசத்தல்
மக்கள் நீதி மய்யம் சார்பில் 2 முஸ்லீம்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: இதுதான் கமல்.. எடுத்த எடுப்பிலேயே முதல் பட்டியலிலேயே 2 முஸ்லீம் வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்து அசத்தி விட்டார்.
பொதுவாக கமல் மீது வைக்கப்படும் விமர்சனம், இந்துத்துவவாதி... பாஜகபின் பிம்பம், மத்திய அரசின் எடுபிடி என்றுதான் திணிக்கப்பட்டு வரும் வார்த்தைகள்.
இன்னொரு பக்கம் மதவாத கொள்கைக்கு எதிரானவர்.. கம்யூனிசவாதி.. பகுத்தறிவுவாதி.. சுருக்கமாக "கமலின் நிறம் சிவப்பு" என்பதுதான்! அதனால்தான் விஸ்வரூபம் படம் வந்தபோது கமலுக்கு எதிரான அம்புகள் பாய தொடங்கின.

விஸ்வரூபம்
அந்த படத்தின் சில காட்சியை நீக்குவதாக கமல் ஒப்புக் கொண்டு, இன்னும் சொல்லப்போனால் ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டார். அதாவது கமலின் கையை முறுக்கி கையெழுத்திட வைத்த ஒன்றாகவே அந்த நிகழ்வு அமைந்திருந்தது.

கமீலா நாசர்
ஆனால் இன்றைக்கு கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் 2 முஸ்லிம்கள் பெயர் கண்ணில் பட்டு மனதை ஈர்த்துள்ளது. மத்திய சென்னையில் கமீலா நாசர், மயிலாடுதுறை - ரிபாயுதீன் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக, திமுக
இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் அவர்களை கவர இந்த வேட்பாளர்களை கமல் நிறுத்தியிருப்பதாகவே எடுத்து கொண்டாலும், அதைகூட அதிமுக, திமுக செய்யவில்லை என்பதுதான் விசித்திரம்!

அடுத்த பட்டியல்?
அந்த வகையில் கமலை மனசார பாராட்டலாம். இன்னும் அடுத்த கட்ட பட்டியல் பாக்கி உள்ளது. அதிலும் ஏதாவது சர்பிரைஸ் வைத்துள்ளாரா கமல் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications