Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொபைல் ஆப் சக்சஸ்.. தமிழ்நாடு மின்சார வாரியம் சூப்பர் முடிவு.. இனி எல்லாமே ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பது, மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மொபைல் ஆப் மூலம் மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்த போகிறதாம் மின்வாரியம் .

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெற வேண்டும் என்றால் மின் வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல் மின் விநியோகத்தில் பிரச்சனை என்றாலும், கால் சென்டருக்கு போன் செய்து தான் நிவாரணம் பெற முடியும். அதேபோல் உங்கள் பகுதியில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட போகிறது என்றால் அதையும் செய்திகளில் பார்த்து தான் அறிய வேண்டும்.

Mobile App Success for new EB connection Tamil Nadu Electricity Board Super decision

உங்கள் வீட்டில், குறைபாடு உடைய மீட்டர் இருந்தால், அதற்கு பதில் புதிதாக மீட்டர் மாற்ற வேண்டும் என்றால் நேரில் தான் போய் விண்ணப்பிக்க வேண்டும். மின்வாரியத்தில் தற்போதைய நிலையில் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் மின்வாரியத்தின் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனுக்கு மாற்ற தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை வேகமாக செய்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் மின் வாரிய ஊழியர்களுக்கு செல்போன ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பை ஊழியர்கள் தங்களது போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள்,

இந்த ஆப் மூலம் மீட்டரில் பதிவாகியுள்ள மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. இதனால், கட்டண விபரம் நுகர்வோருக்கு உடனே எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், செல்போன் ஆப்பில் கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட உள்ளது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட மற்றும் மீண்டும் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் கண்டறிவது, புதிய மின் இணைப்புக்கு ஒப்புதல் வழங்குவது, குறைபாடு உடைய மீட்டருக்குப் பதில் புதிதாக மீட்டர் மாற்ற ஒப்புதல் தருவது உள்ளிட்ட கூடுதல் சேவைகள் ஏற்படுத்த மின்வாரியம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த புதிய திட்டம் சோதனை அடிப்படையில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 12 மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் செயல்படுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இச்சோதனை வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உற்சாகமான மின்வாரியம் மாநிலம் முழுவதும் அமல்படுத்த முடிவு செய்திருக்கிறதாம்.

மின்கட்டணம் செலுத்தாமல் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு பின் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் செல்போனில் உள்ள ஆப்பில் அதிகாரிகளால் அறிய முடிகிறது. இதேபோல் மொபைல் ஆப்பில் புதிய மின்இணைப்புக்கு ஒதுக்கப்படும் மீட்டர் எண்களும் உடனே பதிவு செய்து ஒப்புதல் தர முடிகிறதாம்.

இதனால், அலுவலகத்துக்கு வந்து கணினியைப் பார்த்து ஒப்புதல் அளிக்கும் நேரம் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் மொபைல் ஆப் மூலமே மின்இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பது, மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+