அக்டோபர் 1ல் அமல்.. பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை.. உயர்நீதிமன்றத்தில் பரபர தகவல்
சென்னை: பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார் மேலும் இதனை மீறும் பக்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், செல்போன் பாதுகாப்புக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறித்தும் அறிக்கையில் முக்கிய தகவல் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலதண்டாயுதபாணி் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் சமீபத்தில் முருகன் போட்டோ ஒன்று வலைதளங்களில் வேகமாக பரவியது. அதாவது கோவில் கருவறையில் எடுக்கப்பட்ட போட்டோ என அது வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் கோவில் கருவறைக்குள் செல்போன், கேமரா உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, பழனி தண்டாயுதபாணி கருவறைக்குள் போட்டோ எடுக்கப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு சார்பில் கோவில் இணை ஆணையரின் அறிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி பழனி முருகன் கோவில் இணை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் கோவிலுக்குள் செல்போன், கேமராக்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் செல்போனை பாதுகாப்பதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் ‛‛ கடந்த 2022ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குள் செல்போன், கேமராக்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. செல்போன்களை பாதுகாக்க 5 ரூபாய் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் சுய உதவி குழுக்கள் மூலம் செல்போன் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இதற்காக பழனி கோவிலின் மலை அடிவாரத்தில் செல்போன் சேகரிப்பு மையங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. விஞ்ச், ரோப் கார் மையங்கள், மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் அருகே என 3 இடங்களில் செல்போன் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மலைக் கோவில் அருகே அமைந்துள்ள தண்ணீர் பந்தல் மண்டபம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தவுடன் அது மீட்கப்படும்போது அதன் ஒருபகுதி செல்போன் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு மையமாக பயன்படுத்த திட்டம் உள்ளது.
மேலும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என ரயில், பஸ் நிலையம், பயணிகள் தங்கும் இடங்களில் விளம்பரம் செய்யப்பட உள்ளது. கோவில் வரும் பக்தர்களிடமும் செல்போன் உள்ளதா? என சோதனை செய்யப்பட உள்ளது. இதை மீறும் பக்தர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய நடைமுறைகளை அனைத்து கோவில்களிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications