நமிதாவுக்கு மாற்று.. கன்பெஷன் ரூமில் மிலா?.. வெளியானது புகைப்படம்.. ஆனா அந்த விஷயம் இடிக்குதே?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய நமிதாவுக்கு மாற்றாக கன்பெஷன் ரூமில் மிலா இருக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை பங்கேற்றார். கதை சொல்ல போறேன் டாஸ்கில் இவரது கதையை கேட்ட நெட்டிசன்கள், நமிதாதான் டைட்டில் வின்னர் என முடிவு செய்து அவருக்கு முழு ஆதரவையும் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை வெளியான ப்ரோமோவில் மொத்தம் 18 போட்டியாளர்களில் 17 பேர்தான் இருந்தனர். சரி யார்தான் மிஸ்ஸிங் என பார்த்தால் நமிதா மாரிமுத்து.

ரசிகர்கள்
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். சரி டிஆர்பிக்காக பிக்பாஸ் செய்யும் சித்து வேலையாக இருக்கலாம் என நினைத்தனர். அதாவது கமல்ஹாசன் வரும் எபிசோடுகளில் சிலர் ரெடியாவதற்கு லேட்டாகும், அதனால் சில நிமிடங்கள் கழித்து அவசர அவசரமாக ஓடி வந்து உட்காருவார்கள். சிலர் நிகழ்ச்சியின் இடைவேளையின் போது அவசர வேலையாக சென்றுவிட்டு பின்னர் லேட்டாக வந்து அமர்வார்கள்.
Recommended Video

வெளியேறிய நமிதா
அது போல் ஏதாவது இருக்கும் என நினைத்தார்கள். ஆனால் நமிதா வெளியேறிவிட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரெவ்யூவர் ஒருவர் போட்ட ட்வீட்டால் அதிர்ந்துவிட்டனர். அதே போல் அன்று இரவு நடந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் மிஸ்ஸாகிவிட்டன. அப்போது நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமிதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார் என பிக்பாஸ் தெரிவித்தார்.

நமிதா
தனது கதை மூலம் கமல்ஹாசன் உள்பட அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். இந்த நிலையில் நமிதாவுக்கு பதிலாக மற்றொரு திருநங்கையான மிலா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே மிலாவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல் மகிழ்ச்சியை அளித்தது.

இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் மிலா கன்பெஷன் அறையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் ஆகியுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் ஓ நமிதாவுக்கு பதில் நீங்களா, வாழ்த்துகள் என தெரிவிக்கிறார்கள். அது போல் அவரது கையில் வாட்ச் இருப்பதால் நிச்சயம் இது பிக்பாஸ் வீட்டு கன்பெஷன் அறையாக இருக்காது என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் பிக்பாஸ் போட்டியாளர்கள் போன், வாட்ச் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைக்கில் உள்ள எழுத்துகள்
மேலும் இந்த புகைப்படத்தில் இவர் அணிந்திருக்கும் உடையுடன் பிக்பாஸ் வீட்டு கேமராவை முத்தமிடுவது போன்ற காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வைரலானது. அதில் மிலா அணிந்திருக்கும் மைல் பேகில் SF என உள்ளது. அப்படியென்றால் சிறப்பு விருந்தினர், சிறப்பு என பல அர்த்தங்கள் வருகின்றன. மற்றவர்கள் அணிந்திருக்கும் மைக்கில் அவரவர் பெயர் உள்ளது. ஆனால் மிலாவின் மைக் பேகில் மட்டும் எஸ்எஃப் என எழுதியுள்ளதால் சிறப்பு அழைப்பாளராக அந்த வீட்டிற்குள் அவர் ஏற்கெனவே சென்ற காட்சிகளை வெளியிட்டிருக்கலாம் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் மிலா வருகிறாரா இல்லையா என்பது தெரியவரும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications