திருப்பதி டூ சென்னை வரை.. இரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ந்த மக்கள்
சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் நேற்று இரவு நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவான இந்த நில அதிர்வு சென்னை வரை உணரப்பட்டது. கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
ஆந்திர பிரதேஷ் மாநிலம் திருப்பதி அருகே நேற்று இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. அதாவது, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சென்னை அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட தகவல் மக்கள் மத்தியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்த போதிலும் நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் மக்களுக்கு இந்த அதிர்வு தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினார். முன்னதாக நேற்று ஜப்பானில் ரிக்டர் அளவில் 6 என்ற அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications