சென்னையில் நள்ளிரவு வரை மழை கொட்டும்.. அடுத்த 2 மணிநேரம் முக்கியம்.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை: சென்னையில் இன்று பகலில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் இரவில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இன்று நள்ளிரவு 1 மணி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிற 7 மாவட்டங்களிலும் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலையில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது. மதிய வேளையில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. ஆனால் மாலை நேரத்தில் சென்னையில் காலநிலை மாற தொடங்கியது. இரவில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

இந்நிலையில் தான் சென்னையில் நள்ளிரவு ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நள்ளிரவு ஒரு மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று இரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், மேடவாக்கம், வண்டலூர், ஓஎம்ஆர் சாலை, சோழிங்நல்லூரர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதேபோல் அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரபாக்கம், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவில் மழை பெய்தது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து











Click it and Unblock the Notifications