நேற்று மாதிரி இல்லை.. இன்று தமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக தீவிரமாக மழை பெய்து வந்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக மிக தீவிரமாக மழை பெய்தது.

ஜூலை 1ம் தேதியில் இருந்து சுமார் 220 மிமீ மழை தமிழகத்தில் பெய்து உள்ளது. இயல்பாக பருவமழையின் போது பெய்யும் மழையை விட இது 50% அதிகம் ஆகும்.

காரணம் என்ன

காரணம் என்ன

தென் மேற்கு பருவக்காற்று சரியாக வீசியதுதான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இரண்டும் வங்கக்கடலில் உருவானது. இதனால் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் தீவிரமாக மழை பெய்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நேற்று மழை குறைந்தது.நேற்று தமிழகத்தில் பல இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. அதிலும் பல இடங்களில் நேற்று வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக சென்றதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்று மழை பெய்யவில்லை. பகல் நேரத்தில் நல்ல வெயில் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று

இன்று

இந்த நிலையில் நேற்று வறண்ட வானிலை நிலவிய நிலையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும். அதேபோல் வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை மாலைக்கு மேல் மழை பெய்யும்.

தீவிரம் இல்லை

தீவிரம் இல்லை

ஆனால் தீவிர மழையாக இல்லாமல் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். நீலகிரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+