சுட்டெரித்த சூரியனுக்கு மத்தியில் சுகம் தந்த மழை... இப்டியே இருந்தா நல்லாருக்கும்ல?
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கொட்டிய கனமழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், முன்பு எப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக சுமார் 114 டிகிரி ஃபாரன்ஹீட் வரை கோடை வெயில் வாட்டி வதைத்து இருக்கிறது.
தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தைவிட அதிகமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடை வெப்பநிலை 110 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது.

பாடாய் படுத்தும் வெயில்
இந்த கடும் வெப்பம் காரணமாக பொது மக்கள், வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பகல் நேரங்களில் பொது மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

ஆறுதல் தந்த மழை
இந்த சூழலில்தான் மக்களின் மீது கருணை கொண்ட இயற்கை, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழையை பொழியத் தொடங்கி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் அனைவரையும் வாட்டி வதைத்து வந்த நிலையில் மதியம் யாரும் எதிர்பாராத வகையில் ஓரிக்கை, செவிலிமேடு, ஒலி முகமது பேட்டை, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியார் நகர், பொன்னேரிக்கரை , சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கன மழை பெய்யத் தொடங்கியது.

மழையிலும் சோகம்
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. கன மழையினால் சாலைகளில் மழை வெள்ள நீர் கரைப்புரண்டு ஓடியது. இதே போல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல காற்றுடன் மழை பெய்தது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்றிலிருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒசூரில் நேற்றிரவு சுமார் 7 மணியளவில் இடியுடன் பரவலாக மழை பெய்தபோது மரத்தடியில் ஒதுங்கிய சிவனேஷ் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு, சேலத்திலும் நல்ல மழை
எந்தெந்த மாவட்டங்களில் வெப்பம் அதிகளவில் வாட்டி வதைத்ததோ அங்கே தற்போது மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதியில் 45 மி.மீ. மழையும், சேலத்தில் 37.6 மி.மீ மழையும், திருப்பத்தூரில் 39.5 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 மி.மீ மழையும் உதகையில் 27 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
Recommended Video

மழை தொடரும் என எச்சரிக்கை
அதேபோல் கோவை, திருச்சி, திண்டுக்கல், தென்காசி, தேனி, பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பொழிந்து கோடை வெப்பத்திலிருந்து சற்று நிவாரணம் கொடுத்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்று அலறிய மக்கள் மழையால் ஊரே குளிர்ச்சியானதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 30-40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications