பூந்தமல்லியில் ரூ.540 கோடியில் சகல வசதிகளுடன் நவீன திரைப்பட நகரம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சென்னை கிண்டியில் நடந்த கலைஞர் 100 விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. 'கலைஞர் 100' என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட நடிகர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், நடிகை நயன் தாரா, நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது என்று கூறினார். மு.க ஸ்டாலின் பேசியதாவது: - தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் கருணாநிதி வாழ்ந்து கொண்டிருக்கிறார். தொண்டர்கள் கொடுத்த தலைவர் பட்டத்தோடு மக்கள் கொடுத்த கலைஞர் பட்டத்திற்கும் பொருத்தமானவர் கருணாநிதி.
எழுத்து, பேச்சாற்றல் மூலம்: வாழ்ந்த காலத்தை போலவே மறைந்த பின்னரும் நினைக்கக் கூடிய பெருமை மிக்கவர் கருணாநிதி. 2018-ல் கருணாநிதியின் மறைவால் தமிழகம் கலங்கியது. அவரது மறைவுக்கு பிறகு பல்வேறு துறையினர் புகழஞ்சலி கூட்டம் நடத்தி பெருமை சேர்த்தார்கள். ஆனால், அதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. எழுத்து மற்றும் பேச்சாற்றல் மூலம் ரசிகர்களின் உள்ளத்தில் குடியேறியவர் கருணாநிதி.
அவர் படத்திற்கு வசனம் எழுதினால் அந்த படம் வெற்றி என்றே கருதப்படும். கருணாநிதியின் வசனத்தை கூறித்தான் நடிகர்கள் வாய்ப்பு கேட்கும் சூழல் ஏற்பட்டது. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை அவரது சினிமா பயணம் மிகப் பெரியது. திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் கலைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன அந்த வகையில் தற்போதைய திமுக ஆட்சியும் தொடர்கிறது.
நவீன திரைப்பட நகரம்: இந்த விழா மேடையிலேயே புதிய திட்டங்களை நான் அறிவிக்கிறேன். எம்ஜிஆர் பிலிம் சிட்டி ரூ.5 கோடி செலவில் 4 படப்பிடிப்பு தளத்துடன் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல கமல்ஹாசன் வைத்த கோரிக்கை அடிப்படையில் சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது.
இந்த நவீன திரைப்பட நகரில் விஎப்எக்ஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 ஸ்டார் ஓட்டல் என சகல வசதிகளும் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். கலைஞர் 100 விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஜய் ஆண்டனி, பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதே போல, நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி உள்பட பலரும், இயக்குனர்கள் என பெரும் படையே திரண்டிருந்தது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications