Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிநவீன வசதிகளுடன் அம்பத்தூர் பேருந்து நிலையம்.. திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.11.81 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஓய்வு அறைகள், பயணிகளுக்கான சிறப்பு வசதிகள் என ரூ. 11.81 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்.

சுமார் 1.63 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்துக்குள் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்துவைத்து, பேருந்து நிலையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்துள்ளார்.

Chennai ambattur bus stand

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்பத்தூர் பேருந்து நிலையம் கிட்டத்தட்ட 58 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

அம்பத்தூர், ஆவடி மற்றும் மாதவரம், வில்லிவாக்கம், தாம்பரம் என பல ஊர்களுக்கும் அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையமாகவும் இது அமைந்துள்ளது.

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஓய்வு அறைகள் உள்பட பல்வேறு வசதிகளுடன் ரூ. 11.81 கோடியில் கட்டப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்காக உணவகங்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு அறைகளும், கடைகளும், ஏடிஎம் மையங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

பயணச் சீட்டுகள் வழங்கும் அறை, மின்தூக்கி வசதிகள், ஏடிஎம் வசதிகள், 3 தளவாடங்கள் கொண்ட 20 பேருந்துகள் நிற்கும் வசதி, பேருந்துகள் வழித்தட பதாகைகள், பயணிகள் இருக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பிட வசதிகள் போன்ற அனைத்து வசதிகளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் 140 பேருந்துகள், சுமார் 1400க்கும் மேற்பட்ட முறைகள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல உள்ளன. இதன் மூலம், தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்திலிருந்து பேருந்துகளில் பயணிக்கும் நிலை உருவாகி உள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கிழ் சிஎம்டிஏ சார்பில் நவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Chennai ambattur bus stand

மாதவரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்லும் விரைவுப் பேருந்துகளும் தற்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுவதால், இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது குறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது, ஆவடியில் சுமார் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில் மட்டும் 11 பேருந்து நிலையங்கள் சுமார் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+