ஆட்டத்தை துவங்கிய மோடி, அமித்ஷா! நம்பகத்தன்மையை இழந்த தேர்தல் ஆணையம்: வாக்குரிமை குறித்து முத்தரசன்
சென்னை: எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்நிலையில், மூத்த தலைவர் முத்தரசன் பாஜக அரசை கண்டித்து பேசியிருக்கும் பேச்சுக்கள் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
2026 தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR - Special Intensive Revision) கொண்டுவந்துள்ளன.. ஆனால், இந்த இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையானது, ஜனநாயக முறையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

வாக்குரிமை யாருக்கு
ஏனென்றால், வெளி மாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை தரும் முயற்சியே இந்த அவசர திருத்தப் பணி என்கிறார்கள்.. வெளிமாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பர்யம், கட்சிகள் ஆகியவை அவர்களுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தேசியக் கட்சிக்கே வாக்களிக்கக்கூடும்..
பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் பலர் நீக்கப்படலாம். தகுதியில்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்பதால்தான், எஸ்ஐஆருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்
எதற்காக அவசரமாக சிறப்பு தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்? என்று கேட்டு, இந்த நடைமுறையில் முறைகேடு மற்றும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக திமுக குற்றஞ்சாட்டியிருப்பதுடன், சுப்ரீம்கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.
எனவேதான் இன்றைய தினம் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டன தமிழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றன..
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்பது வெட்கக்கேடான ஒன்று என்று இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக சாடியிருக்கிறார்..
சென்னை தென்மேற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம் திமுக சார்பில் சிவானந்த சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பங்கேற்று பேசினார்.
அப்போது, "இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அதிலிருந்து கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை வாக்குகளை செலுத்தி வருகிறோம்.
மோடி, அமித்ஷா
இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இப்படி ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவது இது தான் முதல் தடவை. இதற்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எந்த போராட்டமும் நடைபெற்றது இல்லை.
ஏனென்றால், தேர்தல் ஆணையம் என்பது மோடியால் அமைக்கப்பட்ட அமைப்போ அல்லது மற்ற பிரதமர்களால் அமைக்கப்பட்ட அமைப்போ கிடையாது.. தேர்தல் ஆணையம். என்பது நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி தந்திருக்கக்கூடிய ஒரு மகத்தான அமைப்பாகும்.. வயது வந்த அனைவருக்கும் வாக்களிக்கக்கூடிய உரிமை தந்திருப்பதும் நமது அரசியலமைப்பு சட்டம்தான்.,
இந்த தேர்தல் ஆணையத்தை நியமனம் செய்யப்படுகின்ற உறுப்பினர்களை எப்படி தேர்வு செய்வது? அதை யார் தேர்வு செய்வது? என்பதற்கு உச்சநீதிமன்றம் ஒரு வழிக்காட்டுதலை செய்தது? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், அதே போல எதிர்க்கட்சி தலைவர் ஆகிய 3 பேரும் தேர்தல் ஆணையம் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வழிக்காட்டியது.
காபி பிஸ்கட்
ஆனால், மோடி அரசு தனக்கு சாதகமான முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தேவையில்லை, நானே இருந்து கொள்கிறேன். நான் நியமனம் செய்யும் ஒரு அமைச்சர் இருந்து கொள்வார். எதிர்க்கட்சி தலைவர், இந்த 3 பேர் கொண்ட குழுவால் பெருன்பான்மை அடிப்படையில் இறுதி செய்யப்படும் என்றார்,
இதில் பெரும்பான்மை யார்? மோடியும், அமித்ஷாவும் தான் பெருன்பான்மை... அங்கே போனால் காபி, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு விட்டு வரலாம். வேற ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் தேர்தல் ஆணையம் என்று மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.
வாக்காளர் பட்டியல்
அதை நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தொடர்ந்து வாக்களித்து வருகிறோம். ஒரு பிரச்சனையும் இல்லை. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியும் நடைபெறுகிறது. அப்போது, தேர்தல் வரும் நேரத்தில், இறந்தவர்களை நீக்குவார்கள். 18 வயது நிரம்பியவர்களை விண்ணப்பம் தந்தால், சேர்த்து கொள்வார்கள். இதில் எந்த பிரச்னையும் கிடையாது.
ஆனால், இப்போது தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்பது தான் வெட்கக்கேடான ஒன்று:" என்றெல்லாம் சாடி பேசினார்.
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications