"கயல்விழி".. திமுகவை நோஸ்கட் செய்த பாஜக.. கடைசிவரை கசியாத சீக்ரெட்.. எல். முருகன் தேர்வானது எப்படி?

எல்.முருகனுக்கு அமைச்சரவையில் சீட் கிடைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.. இந்த பதவி கிடைக்க என்ன காரணம்? பின்னணி என்ன? இதன்மூலம் திமுகவுக்கு பாஜக வைத்துள்ள செக் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரம் முதலே, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சு இருந்தது.. அப்போதே தமிழகத்துக்கு ஏதாவது பிரதிநிதித்துவம் கிடைக்குமா? அங்கீகாரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

குறிப்பாக, பாஜகவில் எல்.முருகன், அதிமுகவில் ஓபி ரவீந்திரநாத், பாமகவில் அன்புமணி ராமதாஸ், தமாகாவில் வாசன் போன்றோர்தான் அந்த எதிர்பார்ப்புக்குரியவர்கள்.. இவர்கள் 4 பேருமே பாஜக மேலிடத்துடன் நெருக்கமானவர்கள்.. இவர்கள் 4 பேருமே சீனியர்கள்.. இதில் வாசனை தவிர, மற்ற 3 பேருமே இந்த பதவிக்காக டேரா போட்டவர்கள்.

 பதவிகள்

பதவிகள்

ஆனால், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க போகிறது என்பது பற்றி பாஜக மேலிடம் கடைசிவரை வாய் திறக்கவே இல்லை.. அந்த அமைச்சர்கள் லிஸ்ட் பிரதமர் மோடி தலைமையில்தான், தயாராகியும் உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக பாஜக்கள் 4 பேரும் முருகன் தலைமையில் டெல்லிக்கு சென்றார்கள்..

 முருகன்

முருகன்

ஆனால், முருகன் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார்.. அப்போதுதான் இவருக்கு ஒருவேளை பதவி இருக்க வாய்ப்பிருக்குமோ என்று ஒரு சந்தேகம் வந்தது.. ஆனால் முருகனை அங்கேயே தங்கும்படி சொன்னது அமித்ஷாதானாம்.. அப்படியானால், ஏற்கனவே அங்கேயே தங்கியுள்ள தம்பிதுரைக்கு சான்ஸ் கிடைக்காதோ என்ற சந்தேகமும் சேர்ந்து வலுத்தது. இறுதியில் முருகன் தேர்வாகி உள்ளார்..

 திமுக

திமுக

முருகன் தேர்வாகி உள்ளதன் மூலம் திமுகவுக்கு ஒரு பதிலடி தரப்பட்டுள்ளது.. அதாவது, தாராபுரம் தொகுதியில்தான் முருகன் போட்டியிட்டார்.. ஆனால் தோற்று விட்டார்.. திமுகவின் கயல்விழி வெற்றி பெற்றுவிட்டார்.. ஏற்கனவே பிரச்சார சமயத்தில் திமுக மேலிடம் ஒரு உறுதிமொழியை தந்திருந்தது.. அதன்படி ஸ்டார் தொகுதிகள் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தொகுதிகளில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் அமைச்சர் பதவி தரப்படும் என்ற உத்தரவாதத்தை வாய்மொழியாக தந்திருந்தது..

செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

அப்படித்தான் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு தற்போது பதவி கிடைத்துள்ளது. அந்த வகையில், கயல்விழிக்கும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இப்போது, இதே திமுகவுக்கு பதிலடி தரும் வகையில், முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது... அதாவது தாராபுரத்தில் வெற்றி பெற்றவர் அமைச்சர்.. தோல்வி அடைந்தவரோ மத்திய அமைச்சர்..!

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதனிடையே, இந்த 3 வருடமாகவே மகனுக்கு சீட் வேண்டும் என்று காத்து கிடந்த ஓபிஎஸ்ஸுக்கும் ஏமாற்றமே.. நேற்று முன்தினம்கூட பாஜக மெச்சிக் கொள்ளும்படி ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. "மத்திய அரசை, ஒன்றிய அரசு என திமுக பேசி வருவது கண்டிக்கத்தக்கது" என்றார்.. ஆனால், இதை பாஜக கண்டுகொள்ளவே இல்லை. அன்புமணியும் 3 வருடமாகவே காத்திருந்தார்.. எனினும், அவர் காங்கிரஸ் அமைச்சரவையில், கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர் என்பதால் அவருக்கும் இந்த முறை பதவி வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Recommended Video

    BJP Cabinetடில் L Murugan! பின்னணி காரணம் என்ன? | OneIndia Tamil
     பதவி

    பதவி

    இதில் வாசனுக்கும் நிச்சயம் சான்ஸ் கிடைத்திருக்கும்.. வாசன் நினைத்திருந்தால் எப்போதோ இந்த பதவியை பெற்றிருக்க முடியும்.. வாசன் என்றால் பிரதமருக்கு ரொம்ப பிரியம்.. தனிப்பட்ட பாசம்.. அதற்கு காரணம் வாசனின் குணம் அப்படி.. மூப்பனாரின் வளர்ப்பு அப்படி.. அனைத்து கட்சி தலைவர்களாலும் விரும்பப்படுபவர் வாசன்..

     சீக்ரெட்

    சீக்ரெட்

    தன்னை வந்து சந்திக்கும்படி மோடி அழைப்பு விடுத்தும், பாஜகவில் தமாகாவை இணைக்கவே இல்லை.. அப்படி இணைத்திருந்தால் வாசனுக்கு தானாகவே இந்த பதவி கிடைத்திருக்கும்.. ஆனால், அதை அவர் விரும்பவில்லை. ஆக மொத்தம், ஒருத்தருக்கும் தெரியாமல், இந்த அமைச்சரவை லிஸ்ட்டை மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து தயாரித்து, பதவி கிடைத்தவர்களுக்கு ஸ்வீட் ஷாக் தந்திருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+