தமிழ் கடவுள் முருகனின் வாகனம் மயிலுக்கு உணவு கொடுக்கும் மோடி - வீடியோ செம வைரல்
தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயிலுக்கு பிரதமர் மோடி உணவு கொடுத்து கொஞ்சும் வீடியோ செம வைரலாகி வருகிறது.
சென்னை: தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயிலோடு தனக்கு இருக்கும் பந்தம் நேசம் குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. இந்த வீடியோவை அவர் பதிவிட்ட சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.
Recommended Video
பிரதமர் வசிக்கும் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் மோடி மயில்களை வளர்த்து வருகிறார். மயிலுக்காக பிரதமர் மோடி தனது வீட்டில் சில கட்டமைப்புகளை அமைக்கச் செய்துள்ளார். பறவைகள் கூடு கட்ட ஏதுவாக இருக்கும் என்பதற்காகக் குறிப்பிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட பதிவில், ஹிந்தி மொழியில் ஒரு கவிதையுடன் மயிலோடு இருக்கும் வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டரில் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலும் மோடி பதிவிட்டிருக்கிறார். மயிலை ரசிக்கும் மோடியின் மனதில் பிறந்த கவிதையை எழுதி இந்த வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார்.
வாக்கிங் செல்லும் மோடி கூடவே தோகை விரித்து நடனமாடும் மயில் என ரசிக்க வைக்கிறது. மயில்களுக்கு உணவுக் கொடுப்பது, அதனுடன் விளையாடுவது போன்றவைகளையும் இந்த வீடியோவில் சில போட்டோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மோடி இந்த வீடியோ பதிவோடு மயிலின் பெருமைகளை விளக்கும் ஒரு கவிதையையும் பதிவிட்டுள்ளார். கண்ணனின் புல்லாங்குழல் இசையையும் தனது கவிதையில் கூறியுள்ளார் மோடி. பிரதமர் மோடி பருவ நிலை மாற்றம் குறித்து 2 புத்தகங்களை எழுதியுள்ளார். இதன் மூலம், இயற்கையின் மீது அதிக அக்கறை கொண்டவராக மோடி இருக்கிறார்.
கந்த சஷ்டி கவசம், வேல் பூஜை என தமிழக பாஜகவினர் தமிழ் கடவுள் முருகன் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நிலையில் மோடி தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயிலுக்கு உணவு கொடுக்கும் வீடியோ பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications