அசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவாரியான வாக்குகள் வித்தியாசல் முன்னிலை வகித்து வருகிறது.

நாடாளுமன்றத்துக்கான லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதன் இறுதிக்கட்ட தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.எப்படியாவது மத்தியில் ஆளும் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும் களம்கண்டன.

சூறாவளி பிரச்சாரம்

சூறாவளி பிரச்சாரம்

இதற்காக அரசியல் கட்சியினர் கடந்த 2 மாதங்களாக சூறாவளி பிரச்சாரம் செய்தனர். அனல்பறந்த பிரச்சாரங்களில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

கண்டுகொள்ளாத பாஜக

கண்டுகொள்ளாத பாஜக

பிரதமர் மோடியின் நமோ டிவி, மோடி ஆர்மி என பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து துடுப்புகளையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்ததோடு எதிர்ப்பும் தெரிவித்தன. எதையும் கண்டு கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தது பாஜக.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

பாஜகவுக்கு சாதகமாகதான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு தேர்தல் அறிவித்த நாளில் இருந்தே ஒலிக்க தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் ஒய்வின்றி அனைத்து மாநிலங்களிளுலும் சூறாவளி பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி.

பனிக்குகை தியானம்

பனிக்குகை தியானம்

கடந்த 17 ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்த நிலையில் 18ஆம் அதிகாலையிலேயே கேதார்நாத் புறப்பட்டார் மோடி. அங்குள்ள சிவன் கோவிலில் பாரம்பரிய உடையில் வழிபாடு நடத்திய மோடி, அங்குள்ள பனிக்குகையில் விடிய விடிய 18 மணி நேரம் தியானம் செய்தார்.

எதிர்க்கட்சிகள் புகார்

எதிர்க்கட்சிகள் புகார்

இந்த விஷயம் நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. மோடியின் தியானம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பானது. இதனால் பிரச்சாரம் முடிந்தபின்னும் கூட, பாஜகவை நோக்கி மக்களின் கவனம் திரும்பியது. இது தேர்தல் விதிமீறல் என போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன.

ரகசிய பூஜைகள்

ரகசிய பூஜைகள்

இதைத்தொடர்ந்து பல இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குஜராத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டன. பல ரகசிய பூஜைகளும் நடத்தப்பட்டதாக பேச்சுகள் பறந்தன.

தனித்து முன்னிலை

தனித்து முன்னிலை

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நாடு முழுவதும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் 280க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே 200 இடங்கள் வித்தியாசம் உள்ளது.

டெல்லி ராஜஸ்தான்

டெல்லி ராஜஸ்தான்

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது பாஜக. டெல்லியில் மோடியின் தியானத்துக்கு பிறகுதான் தேர்தல் நடைபெற்றது. இங்கு 7 தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள்தான் முன்னிலை வகிக்கிறார்கள். காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

தியானம் வேலை செய்யுதே

தியானம் வேலை செய்யுதே

வெற்றியை நோக்கி பாஜக பயணித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு உறைய வைக்கும் குளிர் நிறைந்த பனிக்குகையில் பிரதமர் மோடி விடிய விடிய தியானம் மேற்கொண்டதும் ஒரு காரணம் என கூறுகின்றனர் பாஜகவினர். இதையேதான் எதிர்க்கட்சிகளும் தெரிவிக்கின்றன ஆனால் வேறு தொனியில் தேர்தல் விதிமீறல் என்று..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+