மோடி சொன்ன பொது சிவில் சட்டம்.. குழம்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி.. பாடம் புகட்டுவார்கள்.. முதல்வர்
சென்னை: எதிர்கட்சிகள் ஒன்றிணைவது பிரதமர் மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பொது சிவில் சட்டம் பற்றி பேசியுள்ள மோடி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, திமுகவுக்கு வாக்களித்தால், கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், சோனியா காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். உங்கள் சந்ததிகள் முன்னேற்றத்திற்கும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடிக்கு ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் பாஜகவிற்கு எதிராக கட்சிகளை அழைத்து தேர்தல் வியூகம் அமைக்க முதற்கட்டமாக முயற்சி எடுத்து கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள். அந்த அச்சம் காரணமாகவே பிரதமர் மோடி இறங்கி வந்து பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களை பார்க்க பிரதமர் மோடி செல்லவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் எத்தனையே பிரச்சினைகள் இருக்கும் போது பொது சிவில் சட்டம் பற்றி பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்றும் முதல்வர் ஸ்டாலின் கேற்வி எழுப்பினார். நாட்டிலே குழப்பத்தை ஏற்படுத்தி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications