2018ம் வருடத்தில் டிவிட்டரின் ஹீரோ யார்.. ராகுலா? மோடியா? விடையை பார்த்தா அதிர்ச்சியாகிடுவீங்க!
2018ம் ஆண்டு டிவிட்டரில் அதிக வைரல் ஆன அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா, மோடியா என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: 2018ம் ஆண்டு டிவிட்டரில் அதிக வைரல் ஆன அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா, மோடியா என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
இவர்கள் கடந்த வருடம் டிவிட்டரில் செயல்பட்ட விதத்தை வைத்தும், மக்கள் அவர்களின் டிவிட்டுகளுக்கு கொடுத்த பதில்களை வைத்தும் இந்த விவரம் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி என இரண்டு அரசியல் தலைவர்களும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டீவாக இருக்க கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் யாருக்கு
சமூக வலைதளத்தில் டிவிட்டரில் ராகுல், மோடி இருவரும் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடிக்குத்தான் அதிக பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். மோடிக்கு 44.7 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ராகுலுக்கு 8.08 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

எத்தனை டிவிட்டுகள்
அதேபோல் 2017 ஐ வைத்து பார்க்கும் போது 2018ல் தான் மோடி அதிகமாக டிவிட் செய்துள்ளார். 2018 மோடி மாதம் 300-400 டிவிட்டுகள் செய்துள்ளார். ஆனால் ராகுல் மாதம் 60-100 டிவிட்டுகள் வரை மட்டுமே செய்துள்ளார்.

யார் வைரல்
ஆனால் குறைவான டிவிட் செய்தும், குறைவான பின்தொடர்பாளர்களை கொண்டும் கூட ராகுல் காந்திதான் டிவிட்டரில் வைரலாக இருந்துள்ளார். ராகுல் காந்தியின் டிவிட்டுகள்தான் அதிகமாக ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது.
1. ராகுல் காந்தியின் டிவிட்டுகள் சராசரியாக 8000 தடவை ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது. மோடியின் டிவிடுகள் சராசரியாக 3000 தடவை மட்டுமே ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது.
2. அதேபோல் ராகுலின் டிவிட்டிற்கு சராசரியாக 3000 பதில்கள் வருகிறது. மோடியின் டிவிட்டுகளுக்கு சராசரியாக 600 பதில்களே வருகிறது.
3.அதேபோல் ராகுலின் டிவிட்டிற்கு சராசரியாக 25000 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். மோடியின் டிவிட்டுகளுக்கு சராசரியாக 15000 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். இந்த மூன்றிலும் ராகுல்தான் முன்னிலை வகிக்கிறார்.

ஒரே வருடத்தில் வித்தியாசம்
ஆனால் 2017 வருடத்தில் மோடி அனைத்திலும் ராகுலை விட முன்னிலையில் இருந்தார். ஒரே வருடத்தில் ராகுல் அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறார். முக்கியமாக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற ஒரே வருடத்தில் இவ்வளவு பெரிய மாற்றமும் நிகழ்ந்து உள்ளது.

எதை பற்றி அதிகம்
ராகுல் காந்தி அதிகமாக விவசாயம், வேலை வாய்ப்பு, மோடி குறித்து பேசியுள்ளார். ராகுல் காந்தி 46 டிவிட்டில் 1 டிவிட் வேலைவாய்ப்பு குறித்தும், 17 டிவிட்டில் 1 டிவிட் விவசாயம் குறித்தும், 13 டிவிட்டில் 1 டிவிட் மோடி குறித்தும் பேசியுள்ளார்.
மாறாக மோடி 462 டிவிட்டில் 1 டிவிட் மட்டுமே வேலைவாய்ப்பு குறித்து எழுதுகிறார். 33 டிவிட்டில் 1 டிவிட் மட்டுமே விவசாயம் குறித்து எழுதுகிறார். ஆனால் 33 டிவிட்டில் 1 டிவிடில் தன்னை பற்றி எழுதுகிறார்.

இந்த வருடம் இவர்தான்
இந்த வருடம் முழுக்க ராகுல் காந்திதான் டிவிட்டரில் வைரலாக இருந்துள்ளார். அதேபோல் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட கோ பேக் மோடி போன்ற ஹேஷ்டேக்குகள் அவருக்கு எதிராக பெரிய வைரலாகி உள்ளது. 2017 மோடி வகித்த இடத்தை 2018ல் ராகுல் பிடித்து இருக்கிறார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications