Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல யூடியூபர் இர்பான் கார் பயங்கர விபத்து.. பெண் பலி.. மோதிய வேகத்திலேயே சுருண்டு இறந்த பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல யூடிபர் இர்பான் கார் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடந்த இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான்.. இவர் சென்னையை சேர்ந்தவர்.. மிகச்சிறந்த திறமைசாலி.. இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் இவரது யூடியூப் வீடியோக்களுக்கு 3.64 மில்லியன் சாப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

mohammed irfan famous youtuber car accident and old woman has died near Chengalpet


ஹோட்டல்கள்:

தமிழில் உணவு பதிவுகளை வெளியிடுவதில் மிக முக்கியமானவர்.. கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை ஒன்றையும் விடமாட்டார்.. ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் உணவு பதிவுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட தகவல்களை நிறைவுடன் தன்னுடைய வீடியோவில் தருபவர்..

கடந்த 2016-ல் தன்னுடைய சேனலை துவக்கினார். எப்படியும் இவரது வீடியோவுக்கு ஒரே நாளில் 50,000 வியூவ்ஸ்கள் குவிந்துவிடும்.. சந்துபொந்தில் உள்ள குட்டி ஹோட்டலைக்கூட தேடிப்பிடித்து, அதை பொதுமக்களின் பார்வைக்கு வழங்கிவிடுவார் இர்பான்.. இந்த திறமைதான் அவரை, வெளிநாடுவரை, மக்களிடம் கொண்டுசென்று சேர்த்துள்ளது..

சினிமா பிரபலங்கள்:

சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை, இவரது வீடியோவில் தென்பட துவங்கிவிட்டனர்.. சிலசமயங்களல், அரசியல் பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறார்.. அந்த வீடியோக்களும் மக்களை கவர்ந்து வருகின்றன.

இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அந்தத் திருமணத்தை அவரே நிறுத்தி விட்டார். இது குறித்து பேசிய அவர், "அந்தப்பெண்ணுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு அதிமாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே திருமணத்தை நிறுத்தியதாகவும் இர்ஃபான் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சமீபத்தில்தான், இவருக்கு திருமணமானது.

கலக்கல் போட்டோக்கள்:

இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்.. "என் வாழ்நாளின் இறுதி வரை என் இதயம் யாருக்காக துடிக்கிறதோ, அவரையே திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு உங்களுடைய பிரார்த்தனைகளும், ஆசீர்வாதமும் வேண்டும்" என்று இர்பான் பதிவிடவும், மணமக்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணம் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை இப்போதைக்கு வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இர்பான் கார் விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிகிறது.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பான் கார் சென்றபோது, எதிரே வந்த பெண்மணி மீது பலமாக மோதி, விபத்து ஏற்பட்டுள்ளது.

mohammed irfan famous youtuber car accident and old woman has died near Chengalpet

உண்மையா?:

எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில், அந்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. இர்பானின் கார் டிரைவர் அசாரூதின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் கூறுகிறது.. கார் விபத்தில் உயிரிழந்த நபர் பெயர் பத்மாவதி.. வயது 55 என்றும் தெரியவந்துள்ளது.. கார் மோதிய வேகத்திலேயே சம்பவ இடத்திலேயே பத்மாவதி உயிரிழந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இந்த விபத்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. எனினும் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது இர்பான் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+