திரிஷாவுடன் ஒரே காரில் வந்து! அனைத்து வதந்திகளுக்கும் பதிலடி! விஜய்க்கு guts! மோகன் ஜி ஆதரவு!
சென்னை: சென்னையில் நடந்த ஒரு திருமணத்திற்கு நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே உடையில் வந்து அனைவரின் வதந்தி பேச்சுகளுக்கும் பதிலடி கொடுத்துவிட்டார். அவருக்கு அந்த துணிச்சல் இருக்கிறது என இயக்குநர் மோகன் ஜி, விஜய்க்கு ஆதரவாக தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு ஏராளமான சினிமா, அரசியல் பிரபலங்கள் வருகை தந்தனர்.

அந்த வகையில் திரிஷாவும் விஜய்யும் ஒரே காரில் வருகை தந்தனர். அவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் பட்டு உடை அணிந்திருந்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுவரை எந்த நிகழ்வுக்கும் இது போல் ஒன்றாக வராமல் இதற்கு வந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே தனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு என மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் "அந்த நடிகையுடன் விஜய் அடிக்கடி பொது நிகழ்வுகள், வெளிநாடுகளுக்குச் செல்கிறார். என் கணவருடன் எடுக்கும் புகைப்படத்தை சமூகவலைதளங்களிலும் பதிவிடுகிறார். அந்த நடிகையுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக என் கணவர் எனக்கு வாக்கு கொடுத்த நிலையில் அதை அவர் நிறைவேற்றவில்லை. இன்று வரை அந்த நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வருகிறார்" என சங்கீதா தெரிவித்திருந்தார்.
அந்த நடிகை யாரென்று சங்கீதா சொல்லாத நிலையில், அவர், இவர் என யூகங்கள் பல பறந்தன. சில சமூகவலைதளங்களில் நடிகை பதிவிட்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த நடிகைதான் என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று திரிஷாவுடன் விஜய் வந்ததால் அவர்கள் மீது கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த வகையில் இயக்குநர் மோகன்ஜி, விஜய்க்கு ஆதரவாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திரிஷாவுடன் விஜய் வந்ததன் மூலம் அவரது ஸ்டைலில் அனைவருக்கும் பதில் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அவர் துணிச்சல்காரர் என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள். மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் பொதுவெளியில் சுற்றுவதுதான் கட்ஸ்ஸா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய்யின் நண்பர் நடிகர் ஸ்ரீமானும் விஜய் மீது எந்த தவறும் இல்லை என ஒரு நெட்டிசன் சொன்னதை ஆமோதித்து போஸ்ட் போட்டுள்ளார். அவரையும் பலர் விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications