"நான் கோட்ஸே ஆதரவாளர்".. தீயாய் பரவும் பாஜக உமா ஆனந்த் வீடியோ.. மோகன் குமாரமங்களம் பளீர் கேள்வி!
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக கட்சி சார்பாக போட்டியிடும் உமா ஆனந்தன் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இதை பகிர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மோகன் குமார மங்களம் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை தனியாக போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்காத காரணத்தால் பாஜக தனித்து களமிறங்கி உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பாஜக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே டிஜிட்டல் பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டார்.

பாஜக
இந்த நிலையில் பாஜக கட்சி சார்பாக உமா ஆனந்தன் சென்னையில் களமிறக்கப்பட்டுள்ளார். சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள 134வது வார்டில் உமா ஆனந்தன் போட்டியிடுகிறார். ஏற்கனவே பல மேடைகளில் இவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி இருக்கிறார். தீவிர இந்துத்துவா கொள்கை கொண்ட இவர் சாதி ரீதியாக பல மேடைகளில் பேசி இருக்கிறார். அதேபோல் திராவிட கோட்பாடுகளுக்கு எதிராகவும் இவர் பேசிய வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வருகிறது.

உமா ஆனந்தன்
மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் இவர் தற்போது பாஜக சார்பாக தேர்தலில் களமிறங்கி உள்ளார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கோட்ஸே குறித்து இவர் அளித்த பேட்டி இணையம் முழுக்க சர்ச்சையாகி வருகிறது. கோட்ஸேவிற்கு ஆதரவாக இவர் பேசி உள்ளார். அதில், கோட்ஸே காந்தியை சுட்டார். ஆம் அது அவரின் நியாயாம். அவர் ஒரு இந்து.. இப்பவும் சொல்கிறேன்.. எனக்கு அது மிகவும் பெருமையாக உள்ளது.

கோட்ஸே உமா ஆனந்தன்
நான் பெருமையாக சொல்கிறேன்.. நான் ஒரு கோட்ஸே ஆதரவாளர், என்று உமா ஆனந்த் குறிப்பிட்டு இருந்தார். உமா ஆனந்த் இப்படி கோட்ஸேவிற்கு ஆதரவாக பேசிய வீடியோ இணையம் முழுக்க பரவி வருகிறது. இவரை எப்படி பாஜக வேட்பாளராக தேர்வு செய்தது. எந்த அடிப்படையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மோகன் குமார மங்களம்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மோகன் குமார மங்களம் இந்த வீடியோவை பகிர்ந்து உமா ஆனந்தை விமர்சனம் செய்துள்ளார். உமா ஆனந்த் கோட்ஸே பற்றி பேசும் வீடியோவை பகிர்ந்து , பாஜக அண்ணாமலை.. ரொம்ப நல்லா தேர்வு பண்ணி இருக்கீங்க கண்ணா.. மோடிஜியின் உண்மையான தொண்டன் என்று விமர்சனம் செய்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

உமா ஆனந்த்
அதேபோல் உமா ஆனந்த் பேசிய இன்னொரு வீடியோவை மோகன் குமார மங்களம் பகிர்ந்து உள்ளார். அதில் உமா ஆனந்த் ஜாதிக்கு ஆதரவாக பேசி உள்ளார். அதில், பிராமின் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.. ஜாதிகள் இருக்கிறது.. அது நம்முடைய கலாச்சாரத்தில் ஒன்று. ஜாதிதான் நம்முடைய அடையாளம்/ ஜாதிகள் இல்லை என்றால் நம்முடைய கலாச்சாரம் கிடையாது.

மோகன் குமார மங்களம் வீடியோ
ஜாதிகள் இருக்கிறது. ஜாதிகள் இருக்கும். ஈ. வே. ரா என்ன செய்தார்.. இவ்வளவு நாள் ஜாதியை ஒழித்துவிட்டு என்ன செய்தார் என்று உமா ஆனந்த் இந்த வீடியோவில் பேசி இருந்தார். இதையும் மோகன் குமார மங்களம் பகிர்ந்து, மத மற்றும் ஜாதி பிரிவினை? ஒன்று வாங்கினால்.. ஒன்று இலவசம். எப்படி ஒரு வேட்பாளர் பாருங்க.. விரைவில் இவர் நேராக பாஜக தேசிய செயற்குழுவிற்கு கூட தேர்வாகி விடுவார் என்று காங்கிரசின் மோகன் குமார மங்களம் பகிர்ந்து உள்ளார்.
-
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications