துரைமுருகனுக்கு கண்டனம்... தமிழக காங்.செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆவேசம்
சென்னை: காங்கிரஸ் கூட்டணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசுக்கு பெருந்தன்மையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோகன் குமாரமங்கலம் ட்விட்டர் மற்றும் முகநூலில் துரைமுருகனை விமர்சித்தும், திமுகவை பழித்தும் பதிவு வெளியிட்டுள்ளதால் திமுகவினர் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதனிடையே மோகன் குமாரமங்கலத்தின் பதிவு பின்வருமாறு;

கண்டனம்
காட்பாடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு.துரைமுருகன் அவர்கள் காங்கிரஸ் பற்றி பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி போனால் எங்களுக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று திரு துரைமுருகன் கூறினார். குறிப்பாக எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று சொன்னார். துரை முருகன் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஆகிவிட்டது என்று அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தயவு தேவை
2006இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை அரசாங்கத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் எந்தவிதமான பங்கையும் கேட்காமல் பெருந்தன்மையுடன் வழிநடத்தினோம். அந்த ஆட்சியில் திரு துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அன்றைக்கு அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் தயவு தன்னுடைய பதவியை காப்பாற்றுவதற்காக தேவைப்பட்டது என்று அவர் மறந்து விடக்கூடாது.

கூட்டணி தர்மம்
2011இல் உங்களுடைய கூட்டணியில் தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தும் கூட அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவின் அழைப்பை புறக்கணித்தோம். கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டோம். அன்றைக்கு உங்களுக்கும் காங்கிரஸ் தேவைப்பட்டது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

மூத்தவர்
2019 வேலூர் இடைத்தேர்தலில் உங்கள் மகன் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸின் பங்கில்லை என்று நினைக்கிறீர்களா? திரு துரை முருகன் என்னைவிட வயதில், அனுபவத்தில் பெரியவர். ஆக அவருக்கு நான் அறிவுரை கூறும் இடத்தில் இல்லை. வேண்டுகோள் மட்டுமே அவரிடம் வைக்க விரும்புகிறேன். காங்கிரஸ் மட்டுமில்ல உங்களுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேசாதீர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications