தன்னை தூக்கி எறிந்த சிஎஸ்கேவுக்கு.. மரண பயத்தை காட்டிய 'தனி ஒருவன்' மோகித் சர்மா.. பிளாஷ்பேக்
சென்னை: இவர் வேண்டாம் என சிஎஸ்கேவால் கடந்த 2019ம் ஆண்டில் தூக்கிய எறியப்பட்ட மோகித் சர்மாவை, 2023ம் ஆண்டில் குஜராத் அணி எடுத்தது. மோகித் சர்மா கிட்டத்தட்ட குஜராத் அணியை வெற்றிக்கு பக்கத்தில் அழைத்துச் சென்றார். கடைசி இரண்டு பாலில் கிளைமேக்ஸ் மாறி குஜராத் அணி தோற்றது. போட்டியில் தோற்றாலும் மோகித் சர்மா ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மோகித் சர்மா 2012-2013 ரஞ்சி கோப்பை போட்டியின் போது 7 ஆட்டங்களில் 37 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன்பிறகு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட மோகித் சர்மா, சென்னை அணிக்காக 2019 வரை விளையாடினார். 2020ல் சிஎஸ்கே அவரை எடுக்கவில்லை. 2021 இல் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை.

அதன்பிறகு குஜராத் அணிக்கு தேர்வானார். 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணி பயன்படுத்த வேண்டும் என்று சம்மதிக்க வைத்தார் நெஹ்ரா. இந்த ஆலோசனையை ஏற்று அவரை குஜராத் அணி தேர்வு செய்தது.
தன்னை தேர்வு செய்த குஜராத் அணிக்கு சிறப்பான ஆட்டத்தால் வெற்றிகளை தேடி தந்தார். நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தில் ராயுடுவை அவுட் ஆக்கியதுடன், தோனியை டக் அவுட் ஆக்கினார்.

மொத்த மேட்ச்சையும் குஜராத் பக்கம் மோகித் சர்மா திருப்பினார். கடைசி இரண்டு ஓவர்களை மிகவும் அற்புதமாக வீசினார். இவர் வீசிய கடைசி இரண்டு ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி ஓவரில் முதல் நான்கு பந்துகளில் இரண்டு அல்லது ஒரு ரன் என்கிற அளவில் தான் மோகித் விட்டுக்கொடுத்தார். ஸ்லோவான மற்றும் யார்க்கரை வீசியதால் துபேவும் ஜடேஜாவும் சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினர்.

கடைசி ஓவரில் முதல் நான்கு பந்துகளும் யார்க்கராக வீசினார். ஐந்தாவது பந்துதான் யார்க்கராகவில்லை. ஜஸ்ட் மிஸ் ஆனது இதனால் அதனை சிக்சராக மாற்றினார் ஜடேஜா. கடைசி பந்தை லெக் சைடில் வீசினார் அதனை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஜடேஜா இதனால் தான் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி வெற்றிக்கு ஜடேஜா காரணம் என்றால், மரண பயத்தை காட்டிய மோகித் சர்மா மக்களின் இதயங்களை வென்றுவிட்டார். தன்னை சிஎஸ்கே ஒதுக்கியது தவறு என்பதை தனது ஆட்டத்தால் நிரூபித்துள்ளார் மோகித் சர்மா..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications